Welcome PradhiKarthik: சினிமா செய்திகள்
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts

Friday, May 31, 2013

கணவருடன் விவாகரத்தா? -நடிகை அனன்யா

கணவருடன் விவாகரத்தா? - நடிகை அனன்யா


நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன், எங்கேயும் எப்போதும் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். அனன்யாவுக்கும் திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயலுவுக்கும் 2012-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் தெரியவர அனன்யாவின் பெற்றோர் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர். 

ஆனால் அவர்கள் எதிர்ப்பை மீறி அனன்யா திருப்பதியில் ஆஞ்சநேயலுவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. தற்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்புக்கு வந்த அனன்யாவிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கணவனை விவாகரத்து செய்து விட்டதாகவும் வதந்தி வெளியாகியுள்ளதே என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அனன்யா கூறும்போது, அதெல்லாம் என் சொந்த விஷயங்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது. சினிமா விஷயங்கள் பற்றி கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என்றார். 

மேலும் அனன்யா கூறியதாவது:- நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்தேன். தமிழில் நடித்த நாடோடிகள் படம் ஹீட்டானதால் திருப்புமுனை ஏற்பட்டது. அப்படம் பல மொழிகளில் வந்ததால் பிரபலமானேன். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததற்காக விருதுகள் கிடைத்தன. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். எதிர்காலத்தில் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்பது என் ஆசையாக உள்ளது.

Thursday, May 30, 2013

கமல் நடிக்கும் விஸ்வரூபம் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ்

கமல் நடிக்கும் விஸ்வரூபம் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ்


கமலின் விஸ்வருபம் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தற்போது விஸ்வரூபம் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. 

இப்படத்தையும் கமலே நடித்து இயக்குகிறார். இதில் கமலுடன் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது தாய்லாந்தில் சண்டை காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாகி வருகிறது. 

ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து ஆக்ஷன் சீன்கள் எடுக்கப்படுகின்றன. அதன் பிறகு பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடிக்கிறது. அங்கிருந்து டெல்லி திரும்பி கடைசி கட்ட படப்பிடிப்பை முடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு டப்பிங், ரீரிகார்ட்டிங், டப்பிங், மிக்சிங் பணிகளை துவங்குகின்றனர். தீபாவளிக்கு விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்ய திட்ட மிட்டுள்ளனர்.

Wednesday, May 29, 2013

ரூ 19 கோடி மோசடி: பிரபல மலையாள நடிகை லீனா மரியா காதலனுடன் பண்ணை வீட்டில் கைது!

ரூ 19 கோடி மோசடி: 
பிரபல மலையாள நடிகை லீனா மரியா காதலனுடன் 
பண்ணை வீட்டில் கைது!

 

பார்க்க கொஞ்சம் அமலா பால் மாதிரிதான் தெரிகிறார் இந்த லீனா மரியா பால். முகம்தான் பால் வடிகிற மாதிரி இருக்கிறதே தவிர, அம்மணி செய்துள்ள வேலைகள் அடேங்கப்பா ரகம். இவரும் இவரது காதலன் பாலாஜி என்கிற சந்திரசேகரும் சேர்ந்து ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட்டு பல கோடியை அபேஸ் செய்துள்ளனர். 

கனரா வங்கி சேர்மன்:
                                           அதுமட்டுமல்ல, ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல வேடமிட்டு, பல பெரும்புள்ளிகளிடம் பல கோடிகளை முதலீடு என்ற பெயரில் பெற்று ஏமாற்றியுள்ளனர். கனரா வங்கியின் சேர்மன் என்று நடித்து ரூ 19 கோடியை சுருட்டியுள்ளனர். இப்படி சுருட்டிய பணத்தில்தான் பலகோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ என உலகின் காஸ்ட்லியான கார்கள் அனைத்தையும் வாங்கி அனுபவித்து வந்துள்ளனர்.

லிவிங் டுகெதர் பார்ட்னர்:

 லீனாவின் காதலன் பாலாஜி என்கிற சந்திரசேகர் சென்னையைச் சேர்ந்தவர்தான். இவர்கள் அரங்கேற்றிய மோசடிகள் அனைத்தும் சென்னையைச் சேர்ந்தவர்களிடம்தான். இருவரும் லிவிங் டுகெதர் என்ற முறையில் தாலி கட்டாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். சென்னையில் செய்த மோசடிகளை போலீசார் ஸ்மெல் பண்ணிவிட்டதை தெரிந்து கொண்டதுமே இங்கிருந்து இருவரும் தப்பி விட்டனர்.

சிக்கியது எப்படி?

                                                          
கடந்த மே 12-ம் தேதி லீனாவும் பாலாஜியும் தெற்கு டெல்லியில் உள்ள இந்த பண்ணை வீ்ட்டை மாதம் ரூ 4 லட்சம் வாடகை பேசி குடிவந்துள்ளனர். அப்போது உள்ளூர் போலீஸிடம் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை விசாரணைக்காகக் கொடுத்துள்ளனர். ரூ 19 கோடி கனரா வங்கி மோசடியில் லீனாவுக்கும் தொடர்பிருப்பதை போலீசார் பல மாநில போலீசுக்கும் தகவலாகக் கொடுத்துள்ளனர். அப்போதுதான் லீனா மீது டெல்லி போலீசாருக்கு சந்தேகம் வந்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய ஆறு செக்யூரிட்டிகள்:


                                                       பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்தாலும், தொடர்ந்து அங்கு தங்குவதைத் தவிர்த்த லீனா - பாலாஜி ஜோடி, அடிக்கடி டெல்லியில்தான் தங்கியிருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆயுதம் தாங்கிய ஆறு செக்யூரிட்டிகள் வேறு. இந்த ஆயுதங்களுக்கு ஹரியானாவில் லைசென்ஸ் பெற்றுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காதலன் பாலாஜியுடன் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்குப் போய் திரும்பிய லீனாவைப் பின் தொடர்ந்த போலீஸ், அதிரடியாக பண்ணை வீட்டில் புகுந்துவிட்டனர்.

விலையுயர்ந்த கார்கள், ஆயுதங்கள் பறிமுதல்: 


                                     இருவரையும் கைது செய்ததோடு, அங்கிருந்த விலையுயர்ந்த கார்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்தனர். லீனா - பாலாஜியின் பணம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள், சினிமா வட்டார நண்பர்களின் விவரங்களை இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.

மடிசார் மாமி பட வழக்கு தணிக்கை துறைக்கு ஐகோர்ட் அறிவுரை


மடிசார் மாமி பட வழக்கு தணிக்கை துறைக்கு ஐகோர்ட் அறிவுரை


சென்னை: மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர்  கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி  மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். 


  உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தலைப்பே படத்தின் மதிப்பை அறிவிக்கும். நல்ல கதாபாத்திரங்களில் கதாநாயகர்கள் நடித்தனர். இதனால் அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர். தற்போது வர்த்தக நோக்கத்தில் சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. சமுதாயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள்,  வன்முறைகள் செய்வது தவறு இல்லை என்ற கருத்து சினிமா படங்களில் கூறப்படுகிறது. கதாநாயகர்கள் குற்றம் செய்துவிட்டு இறுதியில் தண்டனை பெறாமல் எளிதில் தப்பி விடுவது போல கதைகள் வருகின்றன. இது இளைய சமுதாயத்தின் மனதை கெடுக்கும். 

                    இதற்கு சினிமா தணிக்கைத் துறையினர் (சென்சார் போர்டு) சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.  இதனால் நாட்டில் வன்முறை அதிகமாகிறது. இதை தவிர்க்க வேண்டும்.சினிமா படத்துக்கு தலைப்புகள் சரியாக வைப்பது இல்லை. சில படங்களில் வன்முறையைத் தூண்டும் வார்த்தைகள், கொடூர காட்சிகள் இடம் பெறுகிறது. சில குற்றவாளிகள் சினிமா படத்தை பார்த்து குற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு படத்தில் இருந்து ஆலோசனை கிடைக்கிறது. Ôமடிசார் மாமி மதன மாமாÕ என்ற படத்தின் தலைப்பு சிறிது நாட்களுக்கு பிறகு மடிசார் மாமி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. படத்துக்கு யூ/ஏ சான்றிதழை சென்சார் போர்டு கொடுத்துள்ளது. கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை.  தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது. 

                          இது தொடர்பாக தணிக்கை குழுவினர் ஜூன் 12ந் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவேண்டும். இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். படத்தின் பெயரை மாற்றி தயாரிப்பாளர் படத்தை திரையிடலாம். 

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tuesday, May 28, 2013

சோ புகழாரம்: எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அஜித்துக்குத் தான் அதிக ரசிகர் பட்டாளம்

 சோ புகழாரம்:
எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அஜித்துக்குத் தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது


சென்னை: அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர்வழி. விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத் ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் தான் பர்ஸ்ட் தல... எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர் அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து அஜீத் தான்... அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை' என கூறியுள்ளார் சோ.

அசத்திட்டீங்க தல... சோவிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு பெறுவது வஷிஸ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவது போல் தான்.

என்னைப் பற்றி வதந்திகள்: லட்சுமிராய் வருத்தம்

என்னைப் பற்றி வதந்திகள்: லட்சுமிராய் வருத்தம்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் கைதாகியுள்ளார். கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் கைதாகியுள்ளனர். தரகர்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மும்பை போலீஸ் அறிவித்து உள்ளது. 

இந்த நிலையில் லட்சுமிராயும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர் நெட்டில் வெளியாயின. இதனால் லட்சுமிராய் வருத்த மடைந்துள்ளார். எனக்கு எதிராக வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று ஆவேசமாக கூறினார். 

இதுகுறித்து லட்சுமிராய் கூறியதாவது:- 

ஸ்ரீசாந்தும் நானும் சேர்ந்து இருப்பது போன்ற படங்கள் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர படத்துக்காக எடுக்கப்பட்டவை இதை இந்த நேரத்தில் இணைய தளங்களில் பரப்புவது பத்திரிகைகளில் வெளியிடுவதும் சரியானது அல்ல. இந்த இக்கட்டான நேரத்தில் இப்படங்கள் வெளியாவதால் என் இமேஜ் பாதிக்கப்படும். நான் ஒரு பெண் எனக்கு எதிராக வதந்திகள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்பித்த போது நான் தூதுவராக இருந்தேன். ஒரு நடிகை என்பதால் ஒப்பந்தம் செய்தனர். தொழில் ரீதியாக மட்டுமே அதில் பங்கெடுத்தேன். ஸ்ரீசாந்துடன் விளம்பர படத்தில் நடித்ததும் தொழில் ரீதியானது தான் மற்றபடி கிரிக்கெட் வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனவே எனக்கு எதிராக உண்மையற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு லட்சுமிராய் கூறினா

Monday, May 27, 2013

மாசாணி திரை விமர்சனம்

மாசாணி திரை விமர்சனம்


(இனியா) காதலிக்கிறார், பணக்காரர் ராம்கி. குடும்ப கவுரவத்தை பெரிதாக நினைக்கும் ராம்கியின் அண்ணி ரோஜா, அவரை விஷம் வைத்து கொல்கிறார். ஊரும் உறவும் ஒதுக்கி வைக்க, கர்ப்பவதியான இனியா, ஊர் எல்லையில் குழந்தை பெற்று இறக்கிறார். அந்த குழந்தையை வளர்க்கிறார், ஊருக்கு சாமி சிலை செய்ய வந்த சிற்பி ஒய்.ஜி.மகேந்திரன். ஜாதிவெறி நிறைந்த அந்த ஊர் கோவிலுக்கு சிலை செதுக்காமல் திரும்புகிறார். மாசாணி ஆவியாகிவிடுகிறார்.
ஊரில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடக்க, பயந்துபோன மக்கள், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒய்.ஜி.மகேந்திரனிடமே சாமி சிலை செய்ய கேட்கிறார்கள். அவர் தான் வளர்க்கும் மாசாணியின் மகன் அகிலை அனுப்பி வைக்கிறார். எந்த ஊரில் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் தாயை ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்தினார்களோ, அதே ஊருக்கு சிலை செய்ய செல்கிறார் அகில். பிறகு என்ன என்பது கிளைமாக்ஸ்.

மாசாணியாக வரும் இனியாவின் அழகு கூடியிருக்கிறது. காணாமல் போன மோதிரத்தை சாணி பிள்ளையார் மூலம் கண்டுபிடிப்பது, தேங்காய் வைத்து நிலத்தடி நீரை அறிவது எல்லாம் பழைய காட்சிகளாக இருந்தாலும், அதை இனியா செய்வதால் ரசிக்க முடிகிறது. பிறகு கர்ப்பவதியாகி அவமானப்படுத்தப்பட்டு சிக்கி தவிக்கும்போது அனுதாபம் அள்ளுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கி ரீ என்ட்ரி கொடுத்தாலும், கேரக்டர் என்னவோ பழசுதான். ஆனாலும் ஆள்இன்னும் அப்படியே இருக்கிறார்.


அகில், சிஜா ரோஸ் ஆரம்பத்தில் ‘கிராமத்து நாயகன்’, ‘அருக்காணி திலகம்’ என்று பட்டம் கொடுத்துக் கொள்வது சுவாரஸ்யம். ‘அவளை நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது’ என்று இவர் சொல்கிறார். ‘என்னை உங்களுக்கு பிடிக்குதுல்ல’ என்று இவர் சொல்கிறார். ஆனால், இருவரும் காதலிப்பதாக ஒரு சீன் கூட இல்லை. கதையைச் சொல்வதா? இவர்களின் காதலைச் சொல்வதா என்பதில் தடுமாற்றம். ஹீரோவின் நண்பன் பிளாக் பாண்டி, உள்ளூர் மைனர் சிட்டிபாபு, கோவில் குருக்கள் மனோபாலா ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ரோஜா தாம்பாளத் தட்டை எட்டி உதைத்து, கார் கதவை வேகமாகத் திறந்து மூடி, ஸ்லோமோஷனில் நடந்து வந்து நடிக்கிறார்.

இசை அமைப்பாளர் பாசில் நம்பிக்கை வரவு. பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு இசைந்திருக்கிறது. ராஜகுருவின் ஒளிப்பதிவு கச்சிதம். ஆவி பழிவாங்கும் ஐடி

Sunday, May 26, 2013

இன்டர்நெட்டைக் கலக்கும் ஸ்ரீசாந்த், லட்சுமி ராய் படங்கள்!

இன்டர்நெட்டைக் கலக்கும் ஸ்ரீசாந்த், லட்சுமி ராய் படங்கள்!



சென்னை: இன்டர்நெட்டில் தற்போது லட்சுமி ராய் மற்றும் ஸ்ரீசாந்த்தின் படங்கள்தான் கலக்கி வருகின்றனவாம். லட்சுமி ராயுடன் நட்பாக இருந்தார் ஸ்ரீசாந்த் என்பது பழைய செய்தி. தற்போது ஐபிஎல் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகியுள்ள நிலையில், ஸ்ரீசாந்த் குறித்த பல விஷயங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் மலையாள மீடியாக்கள்சில ஸ்ரீசாந்த்தும், லட்சுமி ராயும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. அவை இன்டர்நெட் மூலம் வேகமாக பரவி வருகின்றன.




புதிய க்ரைம் படம் டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!

புதிய க்ரைம் படம் டி டே...
 ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!
  


பாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது.

காரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள்.


விலைமாது
இந்தப் படத்தில் ஸ்ருதி ஏற்றுள்ள வேடம் பாலியல் தொழிலாளி. அந்த வேடத்தில் அச்சு அசலாக தோன்ற வேண்டும் என்பதற்காக, மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி பெண்களின் உடை, நடையை கவனித்து அப்படியே படத்தில் பிரதிபலித்துள்ளாராம் ஸ்ருதி.





நிகில் அத்வானி
படத்தை இயக்குபவர் நிகில் அத்வானி. டிஏஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜூன் ராம்பால், ரிஷி கபூர், இர்பான் கான், ஹ்யூமா குரேஷி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே உண்டு.

ஒசாமா பின் லேடன் கதை...

இந்தப் படத்தின் கதை ஒசாமா பின் லேடனின் கடைசி நாட்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்திலவ் மொத்தம் நான்கு நாயகர்கள். இவர்கள் நால்வரும் வெவ்வேறு நோக்கத்தில் பயணித்து வெளிநாட்டில் இணைந்து ஒரு இலக்கை முடிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது.


இதுவரை பார்க்காத லொகேஷன்கள்

இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத ஆப்கன் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். ஷங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். டார்க் நைட் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு சண்டை அமைத்த டாம் ஸ்ட்ருதர்ஸ் இந்தப் படத்துக்கு சண்டை வடிவமைத்துள்ளார்.

ஜூலை ரிலீஸ்..

வரும் ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் ஸ்ருதிக்கு உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தும் வகையில் டப் செய்து வெளியிடப் போகிறார்கள்.

Saturday, May 25, 2013

ஈழப் போராட்டத்தைச் சொல்லும் 'செங்கடல்' படம் தமிழகத்தில் வெளியாக முடியாத நிலையில் அமெரிக்கா முழுவதும் இன்று ரிலீஸ்

 ஈழப் போராட்டத்தைச் சொல்லும்  'செங்கடல்' படம் தமிழகத்தில் வெளியாக முடியாத நிலையில்  அமெரிக்கா முழுவதும் இன்று  ரிலீஸ்


டல்லாஸ் (யு.எஸ்): லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படம் அமெரிக்கா முழுவதும் தமிழர் அமைப்புகளால் திரையிடப்படுகிறது.

தமிழகத்தில் உருவான செங்கடல் திரைப்படம், தணிக்கைக் குழுவின் தடையை தாண்டி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வெளிவந்தது. ஆனாலும் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. செய்தியாளர் காட்சி மட்டுமே திரையிடப்பட்டது.

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு அமைப்புக்களின் உதவியுடன் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது.

ஜப்பான் டூ அமெரிக்கா

ஜப்பானிய, கொரிய, சீன, ஃப்ரெஞ்ச் உட்பட 6 மொழிகளில் சப் டைட்டில்களுடன் ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது இந்தப் படம்.

இதுவரையிலும் 30 நாடுகளில் பல்வேறு நகரங்களில், பல்வேறு மொழியை சார்ந்தவர்கள் பார்த்துள்ளனர். மார்ச மாதம் முதல் சுவிட்சர்லாந்து, சுவீடன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.

தற்போது வட அமெரிக்காவில் பல ஊர்களில் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை டல்லாஸில, ப்ளேனோ பார்கர் ரோட்டில் உள்ள Tom Muehlenbeck சென்டரில் பிற்பகல் 3 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் வந்து பார்வையாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

டல்லாஸில் இலவச டிக்கெட்டுகள்

டல்லாஸில் AHCRL அமைப்பு சார்பில் வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகளுக்கு 972-821-1474 / 9725109214 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். AHCRL (Association for Human Rights and Civil Liberties) அமைப்பு, உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். டல்லாஸ் கிளை சார்பில் செங்கடல் திரைப்படம் வெளியிடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனிலும், தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் சின்சினாட்டி, டெட்ராய்ட், சான் ஃபிரான்சிஸ்கோ, சான் ஓசே, டொரோண்டோ நகரங்களில் செங்கடல் வெளியாகிறது. அனைத்து ஊர்களிலும் லீனா மணிமேகலை பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.

பல்கலைக்கழகங்களில்...

முன்னதாக லீனா மணிமேகலைக்கு சிகாகோ பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. பல்கலைகழக வளாகத்தில் செங்கடல் திரையிடவும் செய்தார்கள். மேலும் நியூயார்க் இன்டெர்னேஷனல் சென்டர் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகமும் லீனாவை கௌரவித்து, படத்தையும் திரையிட்டார்கள். இங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக, பார்வையாளர்கள் பங்கேற்பு திட்ட்த்தின் (Crowd Funding) மூலம் http://www.indiegogo.com இணையதளத்திலும் செங்கடல் வெளியாகியுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஈழ மக்கள் அகதிகளாகப் படும் அவதிகளை ஆவணப் படமாக்கச் செல்லும் ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் ஈழப் போராட்டத்தைச் சொல்லும் படம்தான் இந்த செங்கடல். தோல்பாவை தியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம்தான் லீனா மணிமேகலையின் முதல் திரைப்படம்.

பிரபல பின்னணி பாடகர் டி.எம் சவுந்திரராஜன் மரணம்

பிரபல பின்னணி பாடகர் டி.எம் சவுந்திரராஜன் மரணம்


சென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார்.

வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன்.

பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன்.

அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வசதியான தொழிலதிபரைப் பிடித்த லட்சுமி ராய்

வசதியான தொழிலதிபரைப் பிடித்த லட்சுமி ராய்


சென்னை: நடிகைகளுக்கே உரிய மரபுப்படி, ஒரு வசதியான தொழிலதிபரை தன் காதலில் வீழ்த்தியுள்ளார் லட்சுமிராய்.

இதை அவரே வெளிப்படையாக அறிவித்தும் உள்ளார்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 
வருபவர் லட்சுமிராய். சமீபத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் இவரது பெயர் அடிபட்டது.

இது குறித்து லட்சுமிராயிடம் கேட்டால், "எனக்கேற்ற காதலனை நான் தேர்வு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர். ஜாலியாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர். அவர் யார்? என்று கேட்கிறார்கள்.

தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். இவரை போன்ற ஒருவரைத்தான் வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நான் நடித்த சில படங்களை அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அவர் சினிமா பைத்தியம் அல்ல.

எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு இப்போது தொடர்பு இல்லை. சொல்லப் போனால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது," என்றார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் தன் பெயர் பலமாக அடிபடுவதை்த தவிர்க்க, எப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது!

நாயகியின் வாழ்க்கை - திரை விமர்சனம்

நாயகியின் வாழ்க்கை  


ஒரு கவர்ச்சி நடிகையின் சோகமான வாழ்க்கையை சொல்லும் படம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்மிதா (சனா கான்) வீட்டு வேலை செய்து வாழ்க்கிறார். அவரின் அழகு நடிகையாக்குகிறது. அந்த அழகே ஆபத்தாகவும் இருக்கிறது. நடிகையாக வளர்ந்த பிறகு அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறார் தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா. அவருடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார் ஸ்மிதா. சுரேஷ் கிருஷ்ணாவின் மகன் சுபினுக்கும் ஸ்மிதா மீது காதல். அவளோடுதான் வாழ்வேன் என்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் நடுவில் தவிக்கும் ஸ்மிதா எடுக்கும் முடிவு என்ன? அவர் என்ன ஆகிறார் என்பது கிளைமாக்ஸ்.

சனா கான் ஸ்மிதாவாக நடித்திருக்கிறார் என்று சொல்வது குறைவான வாக்கியம். வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். வேலைக்காரியாக இருக்கும்போது கன்னத்தில் அறைந்து வெளியேற்றிய நடிகையை, ஒரு சினிமா காட்சியில் திருப்பி அறைந்து படும் சந்தோஷம், அன்புக்காக ஏங்கி முன்பின் தெரியாத நபரிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்கும் அப்பாவித்தனம், முதன் முதலாக மது பழகும் குழந்தைத்தனம், தந்தையுடன் வாழும்போதே அவரது மகனும் தன்னை விரும்புவது கண்டு துடிப்பது என்று சனா கானின் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி.

ஸ்மிதாவின் தாடிக்கார நண்பராக வரும் சுரேஷ் கிருஷ்ணாவின் நடிப்பும் பிரமாதம். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் பேசாமல் அமைதியாக ஸ்மிதாவின் வாழ்க்கைக்குள் நுழைந்து அன்பாலேயே அவரை அடைந்து ஆக்கிரமிப்பது வரை கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார். அவரது மகனான வரும் சுபினும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவும், இசையும் படத்துக்கு வண்ணம் சேர்த்திருக்கிறது. ஸ்மிதாவின் கதையை நேரடியாகச் சொல்லாமல் அதை படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளருக்கு, ஒரு இயக்குனர் கதை சொல்வது போன்று திரைக்கதை அமைத்திருக்கும் பாணி அற்புதம்.

நாயகியின் பெயர் ஸ்மிதா, அவரது தாடிக்கார நண்பர், அவர் சினிமாவில் அறிமுகமான விதம் இப்படி சில விஷயங்கள் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை நினைவூட்டுகிறதே தவிர, இது முழுமையான சில்க் ஸ்மிதாவின் கதையல்ல. படம் முழுக்க மலையாள முகங்கள் நிறைந்திருப்பதால் படத்தில் நேட்டிவிட்டி மிஸ்சிங். என்றாலும் எளிய வசனங்களால் அதை சமாளிக்கிறார்கள்.

Friday, May 24, 2013

10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை

10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை 

‘சிலம்பாட்டம்‘, ‘தம்பிக்கு இந்த ஊரு‘, ‘பயணம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனாகான். இவரது உறவுக்காரர் நவித், மும்பையில் உள்ளார். இவருக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. தன்னை மணந்து கொள்ளும்படி நவித், மாணவியிடம் கூறினார். அதை மாணவி ஏற்கவில்லை.  இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாணவி டியுஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சனாகான், நவீத் மற்றும் 3 நண்பர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். மாணவியை காருக்குள் இழுத்து
கடத்த முயன்றனர். ஆனால், மாணவி போராடி அவர்களிடம் இருந்து தப்பினார். மாணவியின் வீட்டுக்கும் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். நவி மும்பை போலீசார் வழக்கு பதிந்து நவித், நண்பர்களை கைது செய்தனர். சனா கானை வலை வீசி தேடி வருகின்றனர்.

Wednesday, May 22, 2013

போலீஸ்னா என் பையன் மாதிரி தான் இருக்கணும் : விஜயகாந்த்!

 போலீஸ்னா என் பையன் மாதிரி தான் இருக்கணும் : விஜயகாந்த்!



நடிகர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று கடந்த சில வருடங்களாக செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது.

முதன் முதலாக என் மகன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போகிறான் என்று விஜயகாந்த் அறிவித்ததும் தான் தாமதம் பல டைரக்டர்கள் அவர் வீட்டுக்கதவைத் தட்டி பல ஆக்‌ஷன் கதைகளைச் சொல்லக் கிளம்பினார்கள். ஆனால் எந்த கதையும் வேண்டாம் என்று கூறிவிட்ட விஜயகாந்த் கொஞ்சநாளைக்கு அந்த முயற்சியை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஆனால் இதுவரை அது குறித்து எந்தவொரு முழுமையான தகவல்களையும் முறைப்படி தெரிவிக்காத விஜயகாந்த் தன் மகன் நடிப்பு பற்றி புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.

ஆமாம், இதுகுறித்து சமீபத்தில் திருவாய் மலர்ந்திருக்கு விஜயகாந்த், “தமிழக காவல்துறை நடுநிலைமையுடன் செயல்படாமல் பாரபட்சம் காட்டுகிறது. ஆளுங்கட்சியிடம் ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியிடம் ஒரு மாதிரியும் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு காவல்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் பல படங்களில் போலீஸ்காரனா நடிச்சிருக்கேன். என் பையனும் நடிக்க வர்றான். அவனுக்கும் போலீஸ் ட்ரெஸ் போட்டுத்தான் நடிக்க வைப்பேன். போலீஸ்காரன்னா எப்படி நடந்துக்கணும்னு அதைப்பார்த்து இப்போ இருக்கிற போலீஸ்காரர்கள் தெரிஞ்சிக்கணும்” என்று ஆவேசமாக பேசினாராம்.a

Sunday, May 19, 2013

மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்!

மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்!




ஒரு படத்தில் நடித்து முடித்து அதன் ரிசல்ட்டை பார்த்து விட்டு அடுத்த படத்தில் கமிட்டாவதெல்லாம் அந்தக்காலமாகி விட்டது. இப்போதெல்லாம் ஒன்றை முடித்ததும் அடுத்த படவேலைகளில் இறங்கி விடுகிறார்கள் விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களே. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 53வது படத்துக்கு இன்னும் பெயர்கூட வைக்கவில்லை. அதற்குள்ளாக சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் இறங்கி விட்டார் அஜீத்.

அதேபோல், விஜய்யோ துப்பாக்கி படத்தின் ரிசல்ட்டைப்பார்த்து விட்டு தலைவாவில் இறங்கியவர், இப்போது அதுவரை வெயிட் பண்ண முடியாது என்பதுபோல் ஜில்லாவில் இறங்கி விட்டார். மதுரை மண்வாசனையுடன் இப்படத்தின் கதை அமைந்திருப்பதால், அந்த ஊர் தமிழை பேசி நடிக்கிறாராம் விஜய். முக்கியமாக, மதுரை கதைக்களத்தில் உருவாகும் பெருவாரியான படங்கள் பெரிய அளவில் வெற்றிகளை சந்தித்து வருவதால், விஜய்யின் இந்த ஜில்லா படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள ஜில்லா டீமில் மோகன்லால், காஜல்அகர்வால் உள்ளிட்ட சில நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறதாம். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் விஜய்-காஜல் இடம்பெறும் காதல் காட்சிகள் படமாகிறதாம். மேலும், என்னதான் மண்வாசனை படம் என்றாலும் பாடல் காட்சிகளுக்கு சில அயல்நாடுகளுக்கு செல்லும் திட்டமும் உள்ளதாம்.

அதிகரிக்கும் பாலியல் தொழிலாளி பற்றிய படங்கள்

அதிகரிக்கும் பாலியல் தொழிலாளி பற்றிய படங்கள் 

                              சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே பல ஹீரோயின்கள், பாலியல் தொழிலாளி வேடம் ஏற்க ஆர்வம் காட்டி வந்ததை ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். காரணம், வழக்கமாக மரத்தைச் சுற்றி டூயட் பாடும் கேரக்டராக இது இருக்காது. மேலும், அந்த வேடத்தில், நடிப்பில் பன்முக திறமைகளை வெளிப்படுத்த முடியும். அது மட்டுமின்றி, ரசிகர்களிடம் அந்த கேரக்டர் பரபரப்பாகப் பேசப்படும். நாடு தழுவிய பப்ளிசிட்டி கிடைக்கும். சில நேரங்களில், விருதுகளும் குவியும்.

ஐஸ்வர்யா ராய், ரீமா சென் போன்றோர் ஆரம்ப காலத்தில் வேற்றுமொழிகளில் பாலியல் தொழிலாளியாக நடித்த படங்கள், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. சில வருடங்களுக்கு முன் ‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா அதுபோன்ற வேடத்தில் நடித்தார். ‘வானம்’ படத்தில் அனுஷ்கா பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். இப்போது தெலுங்கு ‘பவித்ரா’ படத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார். ‘பாலியல் தொழிலாளியாக நடிக்க முகம் சுளிக்கவில்லை. அந்த கேரக்டரை விரும்பித்தான் நடித்தேன்’ என்றும் சொல்லியிருக்கிறார். ‘பிரேம ஒக்க மயக்கம்’ என்ற தெலுங்கு படத்தில், சார்மி கால் கேர்ள் வேடத்தில் நடித்துள்ளார். ‘அப்பாயி கிளாஸ் அம்மாயி மாஸ்’ படத்தில், ஹரிப்பிரியா பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், ‘டி டே’ என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

‘பொதுவாக படங்களை உருவாக்கும்போது, அழகியல் அம்சங்கள் இருக்கிறதா? மெசேஜ் இருக்கிறதா என்று பார்ப்பதை விட, ஹீரோயினை எந்த மாதிரி காட்டுகிறார்கள் என்பதை கவனிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே, பாலியல் தொழிலாளி கேரக்டரில் ஹீரோயினை நடிக்க வைக்கும்போது, இலைமறை காயாக கவர்ச்சியை வாரியிறைக்க முடியும் என்றுகூட சில இயக்குனர்கள் கணக்கு போடுகிறார்கள். திடீரென பரபரப்பான விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காகவும் சில ஹீரோயின்கள் இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புகிறார்கள்’ என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

Saturday, May 18, 2013

ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு

ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு: போலீசில் புகார்

ராமநாதபுரம், மே 18:

                                            ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் அருகே உள்ள ஆத்மநாதசுவாமி நகரைச் சேர்ந்தவர் ரத்தின பாண்டியன். இவரது மனைவி விஜயராணி (வயது35). இவர், மதுரை சென்று விட்டு ராமநாதபுரம் பாரதிநகர் பஸ் நிறுத்தம் வந்து இறங்கினார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சென்றபோது விஜயராணி வைத்திருந்த நகைப்பையை யாரோ ஜேப்படி செய்து விட்டனர்.

பஸ்சில் இருந்து இறங்கியதும் நகைப்பையை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்சுக்குள் 4 1/2 பவுன் தங்க அரை சங்கிலி, 7 1/2 பவுன் டாலர் செயின், 2 கிராம் தோடு ஆகியவை வைத்திருந்ததாக கேணிக்கரை போலீசில் விஜயராணி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம்

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம் 



நடிகர்கள்: சத்யராஜ், மணிவண்ணன், சீமான், கோமல் சர்மா, வர்ஷா, மிருதுளா, அன்ஷிபா, ரகுவண்ணன்

ஒளிப்பதிவு: டி சங்கர்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

பிஆர்ஓ: ஜான்

தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்

எழுத்து- இயக்கம்: மணிவண்ணன்

இந்த நாடும் அரசியலும் நாட்டு மக்களும் நாளாக நாளாக எத்தனை மோசமான கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எள்ளலாகச் சொல்ல மணிவண்ணனைத் தவிர வேறு இயக்குநர்கள் இருக்கிறார்களா... சந்தேகம்தான்!

19 ஆண்டுகளுக்கு முன் அன்றைய அரசியலை அடித்துத் துவைத்து தொங்கவிட்டார் அமைதிப்படை மூலம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் இன்றைய அரசியலைக் கையிலெடுத்துள்ளார்.

வாரிசு அரசியல், கூட்டணி பேரங்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, சட்டசபையில் நாக்கை மடக்கி மிரட்டுவது, அரசியலை முழு வியாபாரமாக மாற்றும் ஆட்சியாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நசுக்கப்படுவது, இயற்கை வளங்களை ஏகபோகமாக கொள்ளையடிப்பது என இன்றை நடப்புகளைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன்.

தேங்காய்ப் பொறுக்கி அமாவாசையாக இருந்து, எம்எல்ஏவாக உயர்ந்து, துணை முதல்வராக அதிகாரத்தைப் பிடிக்கும் நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ (சத்யராஜ்), வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதிவாசிகள் குடியிருக்கும் ஒரு பெரிய காட்டையே விற்க முயற்சிக்கிறார். அதற்கு தடையாக வரும் அத்தனை அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுகிறார். சொந்த மருமகளே எதிராகக் கிளம்ப அவரையும் தீர்த்துக் கட்டத் துணிகிறார்.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மொத்தப் பேரையும் விலைக்கு வாங்கி, முதல்வரை மிரட்டி, அந்த நாற்காலியையும் பிடித்துவிடுகிறார். முதல்வர் நாகராஜசோழனுக்கு எதிராகவும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாகவும் சீமான் தலைமையில் போராட்டம் வெடிக்கிறது. ஆனால் அதனை நசுக்குகிறது நாகராஜசோழன் அரசு. வேறு வழியின்றி போராட்டத்தை மவுனிக்கச் செய்துவிட்டு தலைமறைவாகிறது சீமான் குழு.

நாகராஜ சோழனை கைது செய்ய தீவிர முயற்சி எடுக்கிறது சிபிஐ. உடனே மாநிலம் முழுக்க கலவரமும் வன்முறையும் வெடிக்கிறது. நாகராஜ சோழன் கைதாகிறாரா? அவரது கேடு கெட்ட அரசியல் முடிவுக்கு வருகிறதா என்பது க்ளைமாக்ஸ்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லோருமே இதன் முதல் பாகத்தை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அது தேவையற்றது. காரணம் இரண்டுமே கிட்டத்தட்ட வேறு வேறு படங்கள் மாதிரிதான்.

இன்றைக்கு உள்ள அரசியல் சூழல் மற்றும் சமூக அவலங்களை வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால், இந்த அளவு துணிவாக அத்தனை அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கும் துணிவு எந்த இயக்குநருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்து மக்கள் திருந்திவிடுவார்கள் என்றும் மணிவண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், 'நாட்டு நடப்பு இதானப்பா... இன்றைய அரசியல் திருட்டுத்தனங்களைத் தெரிஞ்சிக்கங்க.. நீங்க சிரிச்சிட்டுப் போனாலும் சரி, சிந்திக்காம போனாலும் சரி...,' என்ற தொனிதான் படம் முழுக்க தெரிகிறது!

படத்தின் ஹீரோ என்று பார்த்தாலும், அது மணிவண்ணன்தான். சத்யராஜை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்கிறார். வசனங்களை அவர் பிரயோகிக்கும் விதம், சூழல், காட்சி எல்லாமே... மணிவண்ணன் என்ற நல்ல எழுத்தாளரை முன்நிறுத்துகிறது.

ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது.

சாம்பிளுக்கு சில:

சத்யராஜ்: என்ன மணியா... எழவெடுத்த தேர்தல் வருது... ஜெயிச்சி தொலைக்கணும்... என்ன பண்ணலாம்?

மணிவண்ணன்: மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு இலவச ஜெனரேட்டர் திட்டம்..!

**
எதிர்கட்சித்தலைவர்: என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்..

சத்யராஜ்: அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில நாக்கை மடிச்சி 'ஏய்' ன்னு சவுண்டு குடுக்கற!

**

சீமான்: மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும்.... மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாறதான் இருக்கும்
ஜெகன்: அப்போ பாறதான் மிஞ்சுமா
சீமான்: அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன்: அப்போ, வெறும் தரதான் மிஞ்சுமா
சீமான்: அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறானுங்களே
**
சத்யராஜ்: அப்பனும் மகனும் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சது அந்தக் காலம்... புருசனும் பொண்டாட்டியும் கட்சி ஆரம்பிப்பது இந்தக் காலம்...
**
சத்யராஜ்: என்ன மணியா... யாரு இவ...

மணி: அட நம்ம பொள்ளாச்சி சரசுங்ணா... நாங்க கும்கின்னு கூப்புடுவோம்...

சத்யராஜ்: அதென்னய்யா கும்கி...

மணி: அது.. இந்த பெரிய யானைங்க, பழகாத முரட்டு யானைங்களை பழக்கி அனுப்பி வைக்கும்ல... அதானுங்ணா...
**
சத்யராஜுக்கு இரு வேடங்கள். அதில் அரசியல்வாதி நாகராஜசோழன் பின்னி எடுக்கிறார். நியாயமாக இந்த கேரக்டர் மீது கோபம் வரவேண்டும். ஆனால் சத்யராஜ் - மணிவண்ணன் லொள்ளு அந்தக் கேரக்டரை ரசிக்க வைத்துவிடுகிறது.

சிபிஐ அதிகாரியாகவும் சத்யராஜையே போட்டிருக்கின்றனர். அவ்வளவு நடிகர் பஞ்சமா... அல்லது பட்ஜெட்டா என்ற கேள்வி எழாமலில்லை.

மணிவண்ணனும் சத்யராஜுமே பிரதானமாய் நிற்பதால் மற்ற நடிகர்கள் பெரிதாக எடுபடவில்லை. அவர்கள் பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

மலைவாழ் மக்களின் மண்ணுரிமையைக் காக்கும் தலைவனாக வருகிறார் சீமான். மக்களை போராடத் தயார்ப்படுத்தும் அவரது பேச்சுகளும், குறிப்பாக போரை மவுனிக்க அவர் சொல்லும் காரணங்களும் ஈழத்து சூழலை நினைவூட்டியது.

ரகுவண்ணன் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார். அமைதிப்படை மூன்றாம் பாகத்துக்கு ரகுவண்ணனைத் தயார்படுத்துவது காட்சியை அமைத்திருக்கிறார் மணிவண்ணன்.

படத்தின் முக்கிய ப்ளஸ் டி சங்கரின் ஒளிப்பதிவு. அரசியல் பரபரப்பையும் வனாந்திரத்தில் நடக்கும் போரையும் அவர் கேமரா அத்தனை அர்த்தங்களுடன் பதிவு செய்துள்ளது.

படத்தின் முக்கிய குறை ஜேம்ஸ் வசந்தனின் இசை. அதை மன்னிப்பதற்கில்லை. இந்த மாதிரி படத்துக்கு என்ன மாதிரி இசை அமைக்க வேண்டும் என்பதை அவர் அமைதிப்படை முதல் பாகத்தைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அந்த முதல் பாகத்திலிருந்து ஒரு காட்சியை க்ளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் படத்தில் சேர்ந்திருப்பார் மணிவண்ணன். அதில் ஒலிக்கும் இசைக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள்தான் ஜேம்ஸ் வசந்தன்களுக்கான உண்மையான விமர்சனம்!

நாகராஜசோழன் நிரந்தரமாக சிறைக்குப் போனதை மணிவண்ணன் கொண்டாடும் விதமிருக்கே... அதுதான் 'அக்மார்க் மணிவண்ணன்' குறும்பு!

அரசியல் எள்ளலை அர்த்தத்துடன் ரசிக்க நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ பாருங்க!

Friday, May 17, 2013

ஸ்ருதி ஹாஸனின் அடுத்த அதிரடி... இப்போ விலைமாது கேரக்டர்!

ஸ்ருதி ஹாஸனின் அடுத்த அதிரடி... இப்போ விலைமாது கேரக்டர்!



மேக்ஸிம் இதழின் அட்டைப் பட செக்ஸி போஸ் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், ஸ்ருதிஹாசன் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார்.

கமல் ஹாஸன் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன் இப்போது இந்தி, தெலுங்கில் பரபரப்பான நடிகையாகிவிட்டார்.


அந்தப் பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வேலையையும் சரியாக செய்து வருகிறார்.

காதல் கிசுகிசு, பரபரப்பு பேட்டிகள் என ஆரம்பத்தில் செய்து வந்தவர், இப்போது செயலில் இறங்கிவிட்டார்.

சில தினங்களுக்கு முன் தம்மாத்துண்டு உடையில் மேக்ஸிம் இதழுக்கு போஸ்கள் கொடுத்தார்.

இப்போது ஒரு இந்திப் படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். டி டே என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார். ரிஷி கபூர், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

பொதுவாக திரையுலகிலிருந்து ரிடையராகும் சமயத்தில்தான் நடிகைகள் இந்த மாதிரி வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் ஸ்ருதி ஹாஸன் ரொம்பவே ஸ்பீடாக இருக்கிறார்... தனது ஏழாவது படத்திலேயே விலைமாதுவை விரும்பி ஏற்றுள்ளார்!!