Welcome PradhiKarthik: மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்!

Sunday, May 19, 2013

மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்!

மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்!




ஒரு படத்தில் நடித்து முடித்து அதன் ரிசல்ட்டை பார்த்து விட்டு அடுத்த படத்தில் கமிட்டாவதெல்லாம் அந்தக்காலமாகி விட்டது. இப்போதெல்லாம் ஒன்றை முடித்ததும் அடுத்த படவேலைகளில் இறங்கி விடுகிறார்கள் விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களே. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 53வது படத்துக்கு இன்னும் பெயர்கூட வைக்கவில்லை. அதற்குள்ளாக சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் இறங்கி விட்டார் அஜீத்.

அதேபோல், விஜய்யோ துப்பாக்கி படத்தின் ரிசல்ட்டைப்பார்த்து விட்டு தலைவாவில் இறங்கியவர், இப்போது அதுவரை வெயிட் பண்ண முடியாது என்பதுபோல் ஜில்லாவில் இறங்கி விட்டார். மதுரை மண்வாசனையுடன் இப்படத்தின் கதை அமைந்திருப்பதால், அந்த ஊர் தமிழை பேசி நடிக்கிறாராம் விஜய். முக்கியமாக, மதுரை கதைக்களத்தில் உருவாகும் பெருவாரியான படங்கள் பெரிய அளவில் வெற்றிகளை சந்தித்து வருவதால், விஜய்யின் இந்த ஜில்லா படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள ஜில்லா டீமில் மோகன்லால், காஜல்அகர்வால் உள்ளிட்ட சில நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறதாம். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் விஜய்-காஜல் இடம்பெறும் காதல் காட்சிகள் படமாகிறதாம். மேலும், என்னதான் மண்வாசனை படம் என்றாலும் பாடல் காட்சிகளுக்கு சில அயல்நாடுகளுக்கு செல்லும் திட்டமும் உள்ளதாம்.