Welcome PradhiKarthik: சமையல் குறிப்புகள்
Showing posts with label சமையல் குறிப்புகள். Show all posts
Showing posts with label சமையல் குறிப்புகள். Show all posts

Wednesday, May 22, 2013

டயட் கோதுமை உப்புமா

டயட் கோதுமை உப்புமா



தேவையான பொருட்கள்

கோதுமை ரவை - 1 ஆழாக்கு

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

பூண்டு - 4பல்

கடுகு, உளுத்தம்பருப்பு,

கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

நீர் - இரு பங்கு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
ரவையைப் போல் இரண்டு பங்கு நீர் ஊற்றி, கொதித்ததும் ரவையையும் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து வேக விடவும்.
குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

Saturday, May 18, 2013

ட்ரை ஃப்ரூட் மில்க்ஷேக்

கோடை உணவு:ட்ரை ஃப்ரூட் மில்க்ஷேக்



என்னென்ன தேவை? 
பேரீச்சம் பழம் - 5,

அத்திப்பழம் - 2,

உலர்ந்த திராட்சை - 20,

பாதாம் - 5,

வாழைப்பழம் - 1,

காய்ச்சி ஆற வைத்த பால் - 250 மி.லி.,

தேன் - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பேரீச்சை முதல் பாதாம் வரை எல்லாவற்றையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் வெண்ணெய் மாதிரி அரைக்கவும். பிறகு அத்துடன்  வாழைப்பழம், பால் சேர்த்து நன்கு அடித்து, தேன் கலந்து பரிமாறவும்.காலை உணவைத் தவிர்க்கிற குழந்தைகளுக்கு இது மிகச் சரியான மாற்று.  இரும்புச் சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், கொழுப்பு என எல்லா சத்துகளும் நிரம்பிய முழுமையான உணவு.வாழைக்கு பதில் ஆப்பிள், தேனுக்கு  பதில் சுகர்ஃப்ரீ, கொழுப்பு நீக்கிய பால் சேர்த்து, இதையே டயட் செய்கிறவர்களும் குடிக்கலாம்.

கம்பங்கூழ்

 கோடை உணவு: கம்பங்கூழ்


என்னென்ன தேவை?

உடைத்த கம்பு குருணை - 1 கப்,

தண்ணீர் - 3 கப்,

கடைந்த தயிர் - 1 கப்,

மோர் - 2 கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?


கம்பு குருணையை கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வேகவிடவும் வெந்து ஆறியதும் மோர், தயிர், உப்பு,  வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நீர்க்கக் கரைத்து பரிமாறவும். 4 கம்பு வெந்ததும் அதை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது  ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக இருக்கும் போது சாதமாகவும் சாப்பிடலாம். மீதமான கம்புருண்டைகளை தண்ணீரில் போட்டு வைக்க  வேண்டும். மண் சட்டியில் செய்தால் சுவைகூடும். 4 கம்பங்கூழை தினம் தண்ணீர் மாற்றி 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.