Welcome PradhiKarthik: புதிய க்ரைம் படம் டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!

Sunday, May 26, 2013

புதிய க்ரைம் படம் டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!

புதிய க்ரைம் படம் டி டே...
 ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!
  


பாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது.

காரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள்.


விலைமாது
இந்தப் படத்தில் ஸ்ருதி ஏற்றுள்ள வேடம் பாலியல் தொழிலாளி. அந்த வேடத்தில் அச்சு அசலாக தோன்ற வேண்டும் என்பதற்காக, மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி பெண்களின் உடை, நடையை கவனித்து அப்படியே படத்தில் பிரதிபலித்துள்ளாராம் ஸ்ருதி.





நிகில் அத்வானி
படத்தை இயக்குபவர் நிகில் அத்வானி. டிஏஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜூன் ராம்பால், ரிஷி கபூர், இர்பான் கான், ஹ்யூமா குரேஷி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே உண்டு.

ஒசாமா பின் லேடன் கதை...

இந்தப் படத்தின் கதை ஒசாமா பின் லேடனின் கடைசி நாட்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்திலவ் மொத்தம் நான்கு நாயகர்கள். இவர்கள் நால்வரும் வெவ்வேறு நோக்கத்தில் பயணித்து வெளிநாட்டில் இணைந்து ஒரு இலக்கை முடிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது.


இதுவரை பார்க்காத லொகேஷன்கள்

இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத ஆப்கன் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். ஷங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். டார்க் நைட் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு சண்டை அமைத்த டாம் ஸ்ட்ருதர்ஸ் இந்தப் படத்துக்கு சண்டை வடிவமைத்துள்ளார்.

ஜூலை ரிலீஸ்..

வரும் ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் ஸ்ருதிக்கு உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தும் வகையில் டப் செய்து வெளியிடப் போகிறார்கள்.