Welcome PradhiKarthik: அழகு குறிப்புகள்
Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts
Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts

Saturday, May 18, 2013

பார்லரில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?

பார்லரில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?

ஒயின் பெடிக்யூர்:

இதுநாள் வரை ஒயின் ஃபேஷியல்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒயின் பெடிக்யூர் ரொம்பவே லேட்டஸ்ட். ஒயின் மற்றும் கிரேப் சீட் ஆயில் வைத்துச்  செய்யப்படுகிற இந்த பெடிக்யூர், கால்களின் சருமத்தை டைட் ஆக்கும். திராட்சையில் உள்ள கிளைகாலிக் அமிலம், இறந்த செல்களை நீக்கும். கிரேப்  சீட் ஆயில், பாதங்களுக்கு ஒருவித சூட்டைக் கொடுக்கும். கடைசியாக ஒயின் பேக்கும் போட்டு, இந்த பெடிக்யூரை முடிப்பார்கள். ரொம்ப நேரம் நடந்த  களைப்பு நீங்க, தளர்ந்து போன கால்களுக்குப் புத்துணர்வு கொடுக்கவே இந்த பெடிக்யூர்.

கேன்டில் பெடிக்யூர்:

இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிற வாசனையான மெழுகு கொண்டு செய்யப்படுகிற சிகிச்சை இது. அவரவர் சருமத்துக்கும் பிரச்னைக்கும்  ஏற்றபடி, விதம் விதமான மெழுகுகள் உள்ளன. அதில் உள்ள திரியைக் கொளுத்தினால், மெழுகு உருக ஆரம்பிக்கும். அது வழக்கமான மெழுகு மாதிரி  இல்லாமல், எண்ணெய் போல இருக்கும். அந்த எண்ணெயை வைத்தே பாதங்களில் மசாஜ் செய்வார்கள். இதனால் வறண்ட சருமம் மாறி, வெடிப்பு  இருந்த இடம் தெரியாமல் மாயமாகும்.

ரெஃப்ளெக்சாலஜி:

முதலில் சொன்ன இரண்டும் அழகு சிகிச்சைகள் என்றால், இது ஆரோக்கிய சிகிச்சை. மசாஜ்தான் இதில் பிரதானம். பாதத்தில் முக்கியமான சில  அழுத்தப் புள்ளிகள் இருக்கின்றன. அது ஒவ்வொன்றும் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கர்ப்பப்பை, கணையம், மூளை என முக்கிய உறுப்புகளுடன்  சம்பந்தப் பட்டவை. அந்த அழுத்தப் புள்ளிகளைத் தெரிந்து கொண்டு அந்த இடத்தில் மசாஜ் செய்யும் போது,  ரத்த ஓட்டம் சீராகும். உடல் களைப்பு  நீங்கி உற்சாகம் பெறும். தூக்கமின்மை, தைராய்டு, சைனஸ், தலைவலி, முதுகுவலி, கை, கால் வலி, மூட்டு வலி, டென்ஷன், மன உளைச்சல் என  தலை முதல் கால் வரைக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் ரெஃப்ளெக்சாலஜி தீர்வளிக்கும். பயணக் களைப்பை விரட்டுவதில் இந்த சிகிச்சையை  மிஞ்ச வேறில்லை.

வறண்ட சருமத்திற்குப் என்னென்ன பழங்களை பயன்படுத்தலாம்

வறண்ட சருமத்திற்குப் என்னென்ன பழங்களை பயன்படுத்தலாம் 




அதிகமாக வற‌ண்டு போகு‌ம் த‌ன்மை கொ‌ண்ட சரு‌ம‌ம் உடையவ‌ர்க‌ள், கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ‌சில சொ‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம். சாதாரணமாக நாம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழத்தை நன்றாகக் கூழாக்க வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கிறது. இத்துடன் தேன்  கலந்து முகத்திலும், கழுத்திலும் பேக் போடவேண்டும். வெறும் அரை வாழைப்பழத்திற்கு 2 டீ ஸ்பூன் தேன் சேர்ப்பது போதுமானது. இந்த பேக்கை 15  முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்துப் பின் முகம் கழுவினால் சருமத்திற்கு நல்ல நரிஷ்மெண்ட் கிடைக்கும்.

'அவகாடோ' என்று ஒரு பழம் இருக்கிறது. பெரிய கடைகளில் கிடைக்கும். இதை பட்டர் ஃப்ரூட் என்போம். இதன் விலையும் மலிவுதான். வெளியில்  பச்சை நிறமாகவும் உள்ளே வெண்ணெய் போலவும் இருக்கும். இந்த வெண்ணெய் மாதிரி இருக்கும் கூழை எடுத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும்.  இந்தப் பழதை உபயோகித்துத்தான் அழகு நிலையங்களில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது.

பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு இவைகளைக்கூட முகத்தில் தடவ உபயோகிக்கலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.  உடனடியாக முகத்திற்குப் போட வேண்டுமென நினைத்தால் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இவற்றை நன்றாக அரைத்துப் பால் அல்லது பால்  பவுடர் கலந்து முகத்தில் ஊறவைக்கவும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவலாம்.

ஒரு முட்டையை உடைத்துப் பால் சிறிதளவு, ரோஜா ஆயில், அல்லது லாவண்டர் ஆயில் (கடைகளில் கிடைக்கும்) இரண்டு அல்லது மூன்று  சொட்டுக்கள் சேர்த்து முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவினால் உலர் சருமத்திற்கான ஊட்டச்சத்து  முட்டையின் மூலம் கிடைக்கும். முட்டை உபயோகிக்க முடியாதவர்கள் புரொட்டீன் கலந்த பொடியை உபயோகிக்கலாம்.

லெஸிதின் பவுடர் என்று புரொட்டீன் பவுடர் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்துப் பால் கலந்து முகத்தில் தடவிக்  கழுவினால் வறண்ட சருமம் நார்மலாகும். இதை ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் இயற்கையிலேயே அழகாகி விடுவீர்கள். இவற்றில்  ரசாயனக்கலவை எதுவும் இல்லாததால் துணிந்து பயன்படுத்தலாம். பொதுவாக உலர் சருமம் உடையவர்கள் குளிர்ந்த நீரில், சாதாரண நீரில் முகம்  கழுவுதல் நல்லது. முகத்துக்குப் பேக் போட, காய்ச்சிய பாலைப் பயன்படுத்த வேண்டும்.