Welcome PradhiKarthik: துபாயில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியரை நாடு கடத்த உத்தரவு

Wednesday, May 15, 2013

துபாயில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியரை நாடு கடத்த உத்தரவு

துபாயில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியரை நாடு கடத்த உத்தரவு 

துபாய், மே 15:

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள துபாயில் 37 வயதான இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் கூறியிருப்பதாவது:-

மது அருந்திய அவர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். கதவை திறந்தவுடன், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவர், அந்த வீட்டின் வேலைக்கார பெண்ணை கட்டித்தழுவி தகாத முறையில் நடந்து இருக்கிறார். இவைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே அவர் 6 மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும். மேலும் தண்டனைக்கு பிறகு அவர் நாடு கடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.