Welcome PradhiKarthik: காஷ்மீர் பதர்வா பள்ளத்தாக்கில் இன்று தொடர் நிலநடுக்கம்

Wednesday, May 15, 2013

காஷ்மீர் பதர்வா பள்ளத்தாக்கில் இன்று தொடர் நிலநடுக்கம்

காஷ்மீர் பதர்வா பள்ளத்தாக்கில் இன்று தொடர் நிலநடுக்கம்

பதர்வா, மே 15:


காஷ்மீர் மாநிலத்தின் பதர்வா பள்ளத்தாக்கு மற்றும் தோடா கிஸ்துவார் பகுதிகளில் இன்று அதிகாலை தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை 1.28 மணி நேரத்திலிருந்து 1.33-க்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.8, 5.3, 5.0 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. அதனைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை மேலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதனால் மக்கள் அச்சத்தில் தூக்கமின்றி தவித்தனர். இப்பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் 33 முறை இப்பகுதிகள் குலுங்கியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் பெரிய அளவிலான நிலநடுக்கத்தை சமாளிப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு எடுக்கப்பட்டுள்ளன.