Welcome PradhiKarthik: கனடா நாட்டில் அதிகம் தென்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்

Friday, May 17, 2013

கனடா நாட்டில் அதிகம் தென்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்

கனடா நாட்டில் அதிகம் தென்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்


கனடா, மே 16:

                         கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும், இது போன்ற 2000  தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும்.

2011ஆம் ஆண்டில், 986  தட்டுகள் இதுபோல் தெரிந்துள்ளன. சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒண்டாரியோ மாகாணத்தில் 40 சதவிகிதமாகவும், மற்ற மாகாணங்களிலும், சஸ்கட்சவா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு தவிர, இது போன்ற ஒளித்தோற்றத்தையோ, பறக்கும் பொருட்களையோ மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர்.

முன்பிருந்ததைவிட, இப்போது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் துவங்கியுள்ளனர் என்று கிரிஸ் ருட்கொவ்ச்கி என்ற விஞ்ஞான எழுத்தாளர் கூறுகின்றார். இத்தகைய தட்டுகள் மாறுபட்ட வடிவங்களில் தென்படுகின்றன. முக்கோண வடிவிலோ, ஒளிப்பிழம்பு போன்றோ, வட்டவடிவ பறக்கும் தட்டாகவோ மாறுபட்ட தோற்றங்கள் மக்களுக்குத் தென்படுகின்றன.

10 வயது சிறுவன் ஒருவன் தான் பார்த்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு நிமிடம் கண்ணுக்குத் தெரிந்த அது, பின்னர் வானத்தில் மிக வேகமாகப் பறந்து சென்றது என்று கூறுகின்றான்.

இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், நாசா விண்வெளிமையம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வட்டவடிவ தட்டு போன்ற ஒரு அமைப்பு, வானவில் நிறத்தில் வெளிச்சத்தை இறைத்தவாறு பூமியின் மேற்பரப்பில் வட்டமிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.