Welcome PradhiKarthik: விவாகரத்து செய்த மனைவியை தாக்கிய முன்னாள் கணவர் கைது

Friday, May 24, 2013

விவாகரத்து செய்த மனைவியை தாக்கிய முன்னாள் கணவர் கைது

விவாகரத்து செய்த மனைவியை தாக்கிய முன்னாள் கணவர் கைது

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே விவாகரத்து செய்த மனைவியை தாக்கிய முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் கரியகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 31). இவரது கணவர் சீனிவாசன். திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மணிமேகலை விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மணிமேகலை வீட்டிற்கு சென்று சீனிவாசன் குழந்தை மற்றும் மணிமேகலையை தாக்கியுள்ளார். நேற்று முன்தினமும் மறுபடியும் மணிமேகலை வீட்டிற்கு சென்று சீனிவாசன் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து மாஜி கணவர் சீனிவாசன் மீது மணிமேகலை ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.