Welcome PradhiKarthik: செய்யது அம்மாள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன உத்தரவு

Friday, May 24, 2013

செய்யது அம்மாள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன உத்தரவு

செய்யது அம்மாள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன உத்தரவு


ராமநாதபுரம்:

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடந்த வேலைவாய்ப்பு வளாகத்தேர்வில் 25 பேர் தேர்ச்சிபெற்றனர். அவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது தலைமையில் நடந்தது. செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார்.

இதில் கல்லூரி தாளாளர் பாபு அப்துல்லா, அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கணேசமூர்த்தி, சுப்பையா ஆகியோர் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார். ராஜாத்தி அப்துல்லா அனைவரையும் பாராட்டி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல்அமீது, சபியுல்லா, மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.