Welcome PradhiKarthik: கமுதி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: கல் வீச்சு-பதட்டம்

Saturday, May 11, 2013

கமுதி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: கல் வீச்சு-பதட்டம்


                                                          


                                                           கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் கயத்தாறில் நடைபெறும் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவுக்காக ஒரு வேனில் புறப்பட்டனர். அப்போது அவர்கள் கோஷமிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 8 வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

கமுதி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.