Welcome PradhiKarthik: பாம்பன் பாலம் அருகே வாலிபர் குத்திக்கொலை: போலீசார் விசாரணை

Wednesday, May 22, 2013

பாம்பன் பாலம் அருகே வாலிபர் குத்திக்கொலை: போலீசார் விசாரணை

பாம்பன் பாலம் அருகே வாலிபர் குத்திக்கொலை: போலீசார் விசாரணை


பாம்பன் பாலம் அருகே வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ராமேசுவரம், பாம்பன் ரோடு பாலம் அருகே கடற்கரையில் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து பாம்பன் போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் பாம்பன் பகுதியை சேர்ந்த அடைக்கலம் மகன் கிங்ஸ்டன் (வயது 26) என்பது தெரிய வந்தது மீனவரான கிங்ஸ்டனை கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பாம்பன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.