Welcome PradhiKarthik: ராமநாதபுரத்தில் 90 கிலோ கடல் அட்டை பறிமுதல்: 2 பேர் கைது

Wednesday, May 22, 2013

ராமநாதபுரத்தில் 90 கிலோ கடல் அட்டை பறிமுதல்: 2 பேர் கைது

ராமநாதபுரத்தில் 90 கிலோ கடல் அட்டை பறிமுதல்: 2 பேர் கைது


ராமநாதபுரம், மே. 22:

90 கிலோ கடல் அட்டையை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் கிருஷ்ணாபுரம் கடற்கரைப்பகுதியில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையினர், சப்-இன்ஸ்பெக்டர் பாலுசாமி தலைமையில் ரோந்து சென் னர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கடல் அட்டையை கடத்த முயற்சிப்பது தெரிய வந்தது. மேலும் மண்டபம் அருகே உள்ள வேதாளையை சேர்ந்த ஜெய்னுலாபுதீன் (வயது 55), முகமது தாரீப் (32) என்பது தெரிய வந்தது.

90 கிலோ கடல் அட்டை இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.