Welcome PradhiKarthik: நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்

Saturday, May 18, 2013

நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்

நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்

                                 அசோக்-கிருத்திகா ஜோடியாக நடித்த வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தபு சங்கர் இயக்கியுள்ளார். அசோக்-கிருத்திகா இருவரும் படப்பிடிப்பில் தொல்லை கொடுத்து நஷ்டப்பட வைத்ததாக இப்படத்தின் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் படத்தை அசோக் கிருத்திகாவை வைத்து தயாரித்தேன். படப்பிடிப்பில் இருவரும் நிறைய கஷ்டம் கொடுத்து விட்டனர். அசோக் மார்க்கெட் இல்லாமல் இருந்தார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். கதாநாயகி 'பொறுக்கி' என்று பேசும் வசனத்தை நீக்கச் சொல்லி அடம் பிடித்தார். அந்த வசனம் முக்கியமானது என்றதும் படப்பிடிப்புக்கு வரவில்லை.

அப்படி பேசினால் தனது இமேஜ்  பாதிக்கும் என்றார். பெரிய நடிகர்களே இமேஜ் பார்ப்பது இல்லை. வளரும் இவருக்கு எதற்கு. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வில்லை. கிருத்திகாவை மலேசியாவில் நடந்த படப்பிடிப்புக்கு அழைத்து போனோம். திடீரென்று அங்கிருந்து ஓடிவிட்டார். ஒரு நாள் முழுவதும் வரவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இருவரும் இப்படி நிறைய தொல்லை கொடுத்தார்கள்.

படம் ரிலீசாவது வரை அமைதியாக இருப்போம் என்றுதான் இதை வெளியே சொல்லவில்லை. தற்போது படம் ரிலீசாகி நன்றாக ஓடுகிறது. புது தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்.