Welcome PradhiKarthik: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: புதிய உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி

Tuesday, May 21, 2013

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: புதிய உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: புதிய உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி



சென்னை, மே 21:

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பதவி வகித்தார். வருவாய்த்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளர் ராஜகோபால் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மின்நிதி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு நில நிர்வாக ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பை டாக்டர் டி.எஸ்.ஸ்ரீதர் கூடுதலாக கவனித்து வந்தார்.

கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆணையர் விஜயகுமார், கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.