குருப்பெயர்ச்சி பலன்கள் : ரிஷப ராசி
ரிஷபம்:

அவர் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். குருபகவான் உங்களுக்கு நன்மை தரும் காலம் என்பதால் இந்த வக்கிர காலத்தில் அவர் சிறப்பான பலனைத் தரமாட்டார். எனவே இந்த வக்கிர காலத்தில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகம் வேலைப்பளு இருக்கும். எல்லோரிடத்திலும் அனுசரணையாக போகவும். திருமணம் போன்ற சுபங்கள் பற்றி பேச வேண்டாம். குருபகவான் மட்டுமின்றி முக்கிய கிரகங்களான சனி, ராகு ஆகியோரும் சாதகமாக இருக்கிறார்கள் . முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் முயன்று பாருங்கள் முன்னேற்றத்துக்கு எளிதில் வழிகாணலாம். இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டுக்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்னியோனியம் மேம்படும். விருந்து,விழா என சென்று வருவீர்கள். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரணாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போதுள்ள வீட்டை விட அதிக வசதிமிகுந்த வீட்டிற்கு குடிபுகுவர்.
உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகம் பார்பபவர்கள் கடந்த காலத்தில் ஏதோ ஒருவித மந்த நிலையில் இருந்திருப்பீர்கள். அந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். வேலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி ஆர்வம் பிறக்கும். மேலும் வேலையில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக குறையும். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் புதிய தெம்புடன் காணப்படுவர். கடந்த காலத்தை விட வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரமும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழிலைத் தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்கள் உங்களிடம் நன்மதிப்பை வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்கள் பின்தங்கிய நிலைலயில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். புகழ், பாராட்டு வந்து சேரும்.
அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு மிகச்சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலர் பெறலாம். விவசாயிகள் முன்னேற்றமான பலனைக் காணலாம். புதிய சொத்துக்களை வாங்கலாம். எல்லா பயிர்களிலும் நல்ல வருமானத்தைப் பெறலாம். நவீன விவசாயத்தை பயன்படுத்தி மேம்பாடு காணலாம். ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் புதிய சொத்து வாங்குவீர்கள். பெண்கள் முன்னேற்றம் அடைவர். புத்தாடை, நகை ஆபரணங்கள் வாங்கலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் உயர்நிலையை அடைவர். விருந்து, விழா என சென்று வரலாம்.உடல்நலம் சீராக இருக்கும். கேதுவால் பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம். ஆனால் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது.
பரிகாரம்:- நவக்கிரங்களில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சித்ரபுத்திர நாயனாரை வணங்குங்கள். ஞானிகளை சந்தித்து, அவர்களுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். ஆண்டி கோலத்தில் உள்ள முருகனை தரிசனம் செய்யுங்கள். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும். துர்க்கை வழிபாடு வாழ்வில் நலத்தைக் கொடுக்கும். செப்டம்பர் வரை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைக் குழந்தைகள் படிக்க இயன்ற உதவி செய்யுங்கள்.