Welcome PradhiKarthik: ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக தகவல்

Friday, May 17, 2013

ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக தகவல்

ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக தகவல்



புதுடெல்லி: சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 3 கிரிக்கெட் வீரர்களையும் 5 நாள் காவலில் எடுத்துள்ள டெல்லி போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட சூதாட்டத்திற்கான ஆதாரங்களை காட்டி போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் தங்களது தொடர்புகளை ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

தமது நண்பரும் சூதாட்ட தரகருமான ஜிஜூ இதில் சிக்க வைத்துவிட்டதாக ஸ்ரீசாந்தும், தான் மாபெரும் தவறு செய்துவிட்டதாக அங்கித் சவானும் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. விசாரணையின் போது ஸ்ரீசாந்த, அங்கித் சவான் கண்ணீர் விட்டு அழுததாகவும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி என அவரது வழக்கறிஞரும், குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.