Welcome PradhiKarthik: மாடல் அழகி பகீர் தகவல்: ஆசாத் ராவுவை மர்ம நபர்கள் சூட்கேஸ்களுடன் ரகசிய அறையில...

Friday, May 24, 2013

மாடல் அழகி பகீர் தகவல்: ஆசாத் ராவுவை மர்ம நபர்கள் சூட்கேஸ்களுடன் ரகசிய அறையில...

மாடல் அழகி பகீர் தகவல்:
ஆசாத் ராவுவை மர்ம நபர்கள் சூட்கேஸ்களுடன் ரகசிய அறையில் சந்திப்பார்கள்



ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் சூதாட்டகாரர்களிடம் இருந்து விலை உயர்ந்த கை கடிகாரங்கள், எலக்ட்ரானிக் பொருட்களை பாக். நடுவர் ஆசாத் ராவுப் பெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஆசாத் ராவுப்பிற்கு சூதாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்கக்கூடுமா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் ஆசாத் ராவுப்பிடம் விசாரணை நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் லண்டனில் நடை பெற இருந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து நடுவர் ஆசாத் ராவுப் நீக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே கடந்த ஆண்டு ஆசாத் ராவுப் மீது பாலியல் புகார் கொடுத்த இந்திய மாடல் அழகி லீனா கபூர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர் பாக அவர் கூறியதாவது: ஆசாத் ராவுப் மீது நான் புகார் கொடுத்த போதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் போலீசார் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆசாத் ராவுப் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு படைத்தவர். எனக்கு பல்வேறு நெருக்கடிகள் வந்ததால் தான் அவர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றேன்.

2011ல் இலங்கையில் வைத்து தான் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட் டது. அப்போது ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது பல்வேறு நபர்கள் ஆசாத் ராவுப்பை வந்து சந்திப்பார்கள். இந்த சந்திப்புகள் அனைத்தும் பூட்டிய தனி அறைக்குள் தான் நடக்கும். நான் அதில் இருந்து ஒதுங்கியே இருப்பேன். ஒரு சில நபர்கள் சூட்கேசுடன் வருவார்கள். அவர் களை ஆசாத் ராவுப் அரு கில் உள்ள தனி அறைக்கு அழைத்து சென்று பேசுவார் என்றார். ஐபிஎல் சூதாட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மாடல் அழகியின் பகீர் தகவலால் ஆசாத் ராவுப் சர்வதேச போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.