Welcome PradhiKarthik: பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Saturday, May 25, 2013

பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி


பரமக்குடி, மே 25:

பரமக்குடி அருகே உள்ள விளாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாத்தப்பா. இவரது மகன் ராமர் (வயது 39). இவர் இன்று காலை அருகில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு சென்றார். 

அப்போது தென்னை மரங்களில் உள்ள தென்னை மட்டைகளை அகற்ற முடிவு செய்து அவர் தென்னை மரத்தில் ஏறினார். மரத்தில் ஏறி மட்டைகளை அகற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற மின்கம்பி ராமர் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே ராமர் துடிதுடித்து இறந்தார். 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் போராடி மரத்தில் சிக்கியிருந்த ராமரின் உடலை கீழே இறக்கினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ராமர் உடல் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்த ராமருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.