Welcome PradhiKarthik: குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த டிராவல்ஸ் அதிபர்: கந்து வட்டிக்காரர் மிரட்டினார்?

Tuesday, May 21, 2013

குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த டிராவல்ஸ் அதிபர்: கந்து வட்டிக்காரர் மிரட்டினார்?

குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த டிராவல்ஸ் அதிபர்: கந்து வட்டிக்காரர் மிரட்டினார்?


சுந்தரேசன் தன் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கந்து வட்டிக்காரர் சேகர் என்பவரது மிரட்டலே காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வட்டிக்கு பணம் கொடுக்கும் சேகரிடம் சில மாதங்களுக்கு முன்பு சுந்தரேசன் பணம் வாங்கி இருந்தார். ஆனால் பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் அசலையும் வட்டியையும் கேட்டு சேகர் மிரட்டியுள்ளார்.

சேகர் மிரட்டல் அதிகரித்ததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுந்தரேசன் புகார் செய்தார். இதனால் சேகர் சிறிது நாள் மிரட்டாமல் இருந்தார்.

கடந்த சில தினங்களாக சேகர் மீண்டும் மிரட்ட தொடங்கினாராம். அவர் சுந்தரேசனின் வீட்டுக்கே வந்து பணத்தை தராவிட்டால் கொன்று விடுவேன் என்றாராம்.

இதனால் சுந்தரேசனும், அவர் குடும்பத்தினரும் பயந்த நிலையிலேயே இருந்தனர். நேற்று சுந்தரேசன் தன் குடும்பத்தினருடன் மகாபலிபுரம் சென்று விட்டு வந்தாராம். அதன்பிறகுதான் கொலை நடந்துள்ளது. எனவே நேற்று இரவு அவர் வீட்டுக்கு சேகர் வந்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.