Welcome PradhiKarthik: பாலச்சந்திரனைக் கொன்றது பிரபாகரன் பாதுகாவலர்கள் தான்:இலங்கை அரசின் புது கதை

Thursday, May 16, 2013

பாலச்சந்திரனைக் கொன்றது பிரபாகரன் பாதுகாவலர்கள் தான்:இலங்கை அரசின் புது கதை

பாலச்சந்திரனைக் கொன்றது பிரபாகரன் பாதுகாவலர்கள் தான்:இலங்கை அரசின்  புது கதை



                         இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக சேனல் 4 வெளிட்டுள்ள வீடியோ காட்சிகள் குறித்து இலங்கை அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

விசாரணை தொடங்கப்பட்டுள்ள விவரங்கள் இலங்கை தூதரக அதிகாரி மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது சேனல் 4: சேனல் 4 தொலைக்காட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது என்று குற்றம்சாட்டியுள்ள இலங்கை அரசு, அந்த தொலைக்காட்சி வெளியிட்டிருந்த காட்சிகள் உண்மையானவை அல்ல என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என்றும் கூறியுள்ளது.