Welcome PradhiKarthik: அரசியலில் குதிக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா

Wednesday, May 22, 2013

அரசியலில் குதிக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா

அரசியலில் குதிக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா


மும்பை : பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன்.

இதனால் அரசியிலில் ஈடுபடுவது பற்றி சமீபகாலமாக யோசித்து வருகிறேன். அரசியிலில் ஈடுபட்டால், நான் நேர்மையான அரசியல்வாதியாக இருப்பேன். நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் ஈடுபட்டால் கவர்ச்சிகரமான அரசியல்வாதியாக இருப்பேன். நல்ல ஆடைகளுடனும், நல்ல கூந்தலுடனும் காட்சி அளிப்பேன். ஒரு நாள் மக்களை சந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேன். ஊழல் ஒழிந்தால் இந்தியா பிரகாசிக்கும். ஊழலால் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.