Welcome PradhiKarthik: அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு

Tuesday, May 21, 2013

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு


வாஷிங்டன்:  
                            அமெரிக்காவில் 200 மைல் வேகத்தில் சூறாவளி புயல் வீசியது. இதில் இடிபாட்டில் சிக்கி 91 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணம் தென் பகுதியான மூர் பகுதியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இங்கு நேற்று மதியம் பயங்கர சூறாவளி புயல் காற்று வீசியது. இதில் வீடு மற்றும் அலுவலகம், பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடத்தின் மேற்கூரை காற்றில் பறந்து சென்றன.

சாலையோரம் நிறுத்தியிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. 1 மணிக்கு 200 மைல் (320 கிலோ மீட்டர்) வேகத்தில் வீசிய சூறாவளி காற்று மூர் நகரத்தையே புரட்டி போட்டது. மின் சாதனங்கள், தொலைதொடர்பு கட்டமைப்புகள் உள்பட எல்லாம் சேதம் அடைந்தன. இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், மூர் பிளாசா டவர் துவக்க பள்ளி உள்ளது. புயல் காற்று பள்ளியின் மேற்கூரையை பெயர்த்து சென்றது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்தது. பள்ளியில் இருந்த 24 மாணவர்களை காணவில்லை. கழிவறையில் இருந்த 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காற்று வேகமாக வீசியதால் ஒரு வீட்டில் அம்மாவும், மகளும் இறந்தனர். இந்த சூறாவளி காற்றால் இடிபாடுகளில் சிக்கி பள்ளி மாணவர்கள், குழந்தைகள் உள்பட 51 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் 120க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது. சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளி காற்றால் மூர் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.

அந்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமா, ஒக்லஹாமா கவர்னர் மேரி பாலின் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இங்கு தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சூறாவளியால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.