Welcome PradhiKarthik: பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் கைது

Friday, May 17, 2013

பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் கைது

பட்டணம் காத்தான் சோதனைச்சாவடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் கைது

இராமநாதபுரம், மே 17:



                               இராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையிலான போலீசார் பட்டணம் காத்தான் சோதனைச்சாவடி அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலைபகுதியில் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.

                                      உடனே போலீசார் சுற்றிவளைத்து எம்.எஸ்.கே.நகர் அங்குச் சாமி, பசும் பொன் நகர் முத்து, கேசவன், விஜயகுமார், நாகநாதபுரம் அகமதுகனி, ஓம்சக்திநகர் சுரேஷ், விவேகானந்தர்தெரு மகாலிங்கம் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ. ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனர்.