Welcome PradhiKarthik: ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி

Friday, May 17, 2013

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி


                                     ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளில் 35 பேர் பலியாகினர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பேருந்து நிலையம், சந்தை, உணவு விடுதி ஆகியவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிர்குக் நகரில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 10 பேர் பலியாகினர். ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 15 பேர் பலியாகினர்.

ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.