இராமநாதபுரத்தில் கோடைகால கூடைபந்து பயிற்சி 10 நாட்கள் நடந்தது
இராமநாதபுரம், மே 16:
இராமநாதபுரம் மாவட்டம் கூடைபந்தாட்ட கழகத்தின் சார்பில் முதல் முதலாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கூடை பந்தாட்ட கோடை கால பயிற்சி 10 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 65 இளைஞர்களும், சிறுவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் சத்தியசீலன் கூடைபந்தாட்டத்தின் நுணுக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் கையாலும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதன் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்றது.
விழாவில் மாவட்ட கூடைபந்தாட்ட கழகத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம்பிரபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் கூடைபந்தாட்ட கழகத்தின் தலைவர் தனசீலன், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளரும், மாவட்ட கூடைபந்தாட்ட கழகத்தின் துணை தலைவருமான சம்பத், தி.மு.க. நகர் செயலாளர் சேது கருணாநிதி, வக்கீல் சவுமிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கே.வி.ஆர். கூடைபந்தாட்ட கழகத்தின் நிர்வாகிகள் சரவணன், உடற்கல்வி ஆசிரியர்கள், தமிழரசு, ராஜா, சுரேஷ், குமார் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கெண்டனர். முடிவில் கே.வி.ஆர். கூடைபந்தாட்ட கழகத்தின் நிர்வாகி வேலவன் நன்றி கூறினார்.