மாயன்கள் வரலாறு பற்றி சில தகவல்கள் (படங்கள் இணைப்பு)
மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும். கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.
கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்க்கு முன்பாகவோ காலண்டர்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது. கி.பி. 1511 கோன்சலோ குரேரோ என்ற ஸ்பெயின் நாட்டுகாரரின் கப்பல் புயலில் சிக்கி மாயன் பகுதியில் கரை தட்டியது. அவர் அங்கு வாழும் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1517 ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மேல் போர் தொடுத்தது. 90 சதவீத மாயன் மக்கள் கொல்லபட்டார்கள். அத்தோடு மாயன் மக்கள் கலாச்சாரம் மறைந்தது.
இவர்கள் சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தினார்கள். கோகோ இவர்களின் முக்கிய பானமாக இருந்திருக்கிறது. மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது..