Welcome PradhiKarthik: 2-வது உலகப் போருக்கு பிறகு ஏற்பட்டுள்ள பெரிய அழிவு

Tuesday, March 15, 2011

2-வது உலகப் போருக்கு பிறகு ஏற்பட்டுள்ள பெரிய அழிவு

2-வது உலகப் போருக்கு பிறகு ஏற்பட்டுள்ள பெரிய அழிவு: ஜப்பானில் மீண்டும் பூகம்பம்;
Monday 14th of March 2011
ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது. இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.

தற்போது ஜப்பான் மக்கள், சுனாமி மற்றும் அணு உலைகள் வெடிப்பால் உலகப் போர் பேரழிவை விட அதிகமான அழிவை சந்தித்துள்ளனர். பொருட்சேதம் அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஜப்பான் மக்களை நில அதிர்வுகளும், பூகம்பங்களும் தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம் ஏற்பட்ட பிறகு இது வரை சுமார் 175 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. நேற்று முன்தினம் 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது.

நேற்று காலையிலும் ஜப்பான் கிழக்கு கடலோரத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ஜப்பானில் முக்கிய பெரிய தீவான ஹோன்சுவை மையமாக கொண்டு ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த தீவு உலகில் 7-வது பெரிய தீவாக கருதப்படுகிறது. இதற்கிடையே புகுஷிமா பகுதியில் 3-ம் எண் அணு உலை வெடித்தது. இது கிழக்கு கடலோர பகுதியை குலுங்க செய்தது. தீவின் கடலோரத்தில் பூகம்பம் ஏற்பட்டதாலும், அணுஉலை வெடித்ததாலும் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பீதி கிளம்பியது.

இதனால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். சில மணி நேரம் கழித்து சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். என்றாலும் வட கிழக்கு கடலோர மக்கள் மனதில் இன்று சுனாமி பீதி படர்ந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2 நாட்களாக உலுக்கும் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளில் இந்த தீவு சுமார் 8 அடி நகர்ந்து விட்டது. ஜப்பான் வட பகுதி கடலோர ஊர்கள் முழுவதும் சேறும் சகதியுமாக கிடக்கின்றன. சாலைகளில் கார்களும், கண்டெய்னர்களும் குப்பைகளாக மாறி கிடக் கிடக்கின்றன. மக்களிடம் தொடர்ந்து பீதி காணப்படுகிறது.