Welcome PradhiKarthik: சைனஸை நிச்சயமாக குணப்படுத்த முடியும்

Friday, October 22, 2010

சைனஸை நிச்சயமாக குணப்படுத்த முடியும்


          
                                                                       ஜெயந்திக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். உடனுக்குடன் ஜலதோஷத்துக்கான சிகிச்சை எடுத்துக் கொள்வார். நான்கு ஐந்து நாளில் ஜலதோஷம் காணாமல் போய்விடும். திரும்ப வரும். அவதிப்படுவார்... திரும்ப சிகிச்சை... என்று இந்த பத்து வருடமும் அவர் படாத பாடு இல்லை.. தனக்கு வரும் ஜலதோஷத்திற்கான உண்மையான காரணம் என்ன என்று கண்டுபிடிப்பதில் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாததுதான் இதற்குக் காரணம். ஒருநாள் மூச்சுவிட சிரமமாக இருக்கிறது என்று ணிழிஜி டாக்டர் ஒருவரிடம் சென்றார். பரிசோதனையில் அவருக்கு சைனஸ் இருப்பது தெரிய வந்தது. இப்படித்தான் பலர் சைனஸ் தலைவலியால் அவதிப்படுவார்கள். ஆனால், அதில் சிலர்தான் சரியான சிகிச்சை பெற்று குணம் அடைவார்கள். இன்னும் சிலரோ ஏதோ சிகிச்சை பெற்று அப்பொழுது மட்டும் குணம் அடைந்து, மறுபடியும் மறுபடியும் அவதிப்படுவார்கள். இப்படிச் சிலர் அவதிப்பட்டு வெவ்வேறு டாக்டர்களை நாடி, 'இந்தச் சைனஸ் தொல்லைகளிலிருந்து விமோசனமே கிடைக்காதா?' என்று வெறுத்துப்போவதும் உண்டு. \"இன்றைய விஞ்ஞானத்தில் இனி சைனஸ் தொல்லைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதனால் சைனஸை நிச்சயமாக குணப்படுத்த முடியும்\" என்கிறார் சென்னை ஏவி.எம். மெடிக்கல் ஈ.என்.டி. ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவி. கே. விஸ்வநாதன்.

                                  நோயாளிகளுக்கு முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். அதாவது நம்மில் பெரும்பாலோர் ஜலதோஷமும், சைனஸ§ம் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டே சிகிச்சைக்கு வருகிறார்கள். எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. ஆனால் சைனஸ§க்கு மூலகாரணம் ஜலதோஷம்தான். அதாவது ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணமடைந்துவிடும். இது வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. சைனஸ§க்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாலும், பெரும்பாலும் ஜலதோஷத்தின் விளைவுதான் காரணமாக அமைகிறது.

சைனஸ் என்றால் என்ன?:

                          நம் தலையில் கபால எலும்புகளின் முன்பக்கத்தில் உள்ள காற்றறைகளைத்தான் சைனஸ் என்று சொல்கிறோம். இவைதான் முகத்திலுள்ள எலும்புகளை மறைத்து முக அழகைத் தருகிறது. நமது முகத்தில் கன்ன எலும்புகள், மூக்கு எலும்புகள், நெற்றி எலும்புகள், பொட்டு எலும்புகள் ஆகிய இடங்களில் இந்த நான்கு இடங்களில் சைனஸ் உள்ளன. ஏதாவது ஒரு இடத்தில் நீர் தேங்கினால் அந்தப் பகுதியிலுள்ள சளிச்சவ்வு வீங்கிக்கொள்ளும். இதுதான் சைனசிட்டிஸ் என்கிற மூக்கழற்சி நோய். மூக்கடைப்பு, அடிக்கடி ஜலதோஷம், தொடர் தும்மல், தலைவலி, கண்வலி ஆகியவை சைனசிட்டிஸின் அறிகுறிகள். மூக்குத் துவாரங்களின் வழியாக நீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டால் தானாகவே காற்றறைகளில் சைனஸ் படரும். இதனால் சளி அடைத்துக்கொண்டு சைனஸிலுள்ள காற்று முழுவதும் உறிஞ்சப்படும்போது தலைவலி உண்டாகிறது.

மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கும் இந்த சைனஸ் அறைகளின் முக்கியமான பயன் _ நாம் எழுப்பும் ஒலிக்குச் சரியான அதிர்வுகள் தந்து இனிமையைச் சேர்க்கின்றன.

அடைப்பு ஏன் ஏற்படுகிறது?

இந்த சைனஸ் அறைகள் அடைத்துக்கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. மூக்கின் நடுவில் இருக்கவேண்டிய தடுப்புச் சுவர் (ஷிமீஜீtuனீ) சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அது வளைந்து இருக்கும் பட்சத்தில் அடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அடைப்புக்கான இரண்டாவது காரணம், அந்த அறை வாசலில் ஏற்படும் சதை வளர்ச்சி. மூன்றாவதாக, தூசுகள் உள்ள இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அத்தூசுகள் மூக்கினுள் உள்ள ஜவ்வுகளைத் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு அடினாய்டு சதை வளர்வது இன்னொரு காரணமாகும்.

சைனஸ் தொல்லைகள்!

தலை பாரமாக இருக்கும். கீழே குனியும்போது தலைவலி அதிகமாகும். காற்றறையில் நீர் தேங்கியிருப்பதால் தலையில் நீர் குலுங்குவது போல் இருக்கும். மூக்கடைப்பு என்பது சைனஸோடு சம்பந்தப்பட்டது என்பதால் மூக்கும் அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும். இதனால் சுவாசிக்க சிரமமாக இருக்கும். வாசனை தெரியாது. ருசியையும் உணரமுடியாது. பேச்சில் தெளிவு இருக்காது.

பொதுவாக சைனஸ் என்பது தொண்ணூறு சதவிகிதம் ஜலதோஷத்தின் விளைவுதான் என்றாலும் அதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. பல்லில் உள்ள சொத்தை வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு உண்டு. அப்போது இந்த சைனஸ் அறையிலும் சீழ் தேங்க ஆரம்பித்துவிடும்.

பல் சொத்தை மட்டுமல்ல, பல்லைப் பிடுங்கும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக்கூடாது.

இதே மாதிரி இந்த சைனஸ் அறைகளுக்கு மிக அருகிலேயே கண்கள் இருப்பதால், கண்கள் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டும். சிலருக்கு கண்களைச் சுற்றி சீழ் பிடித்து பாதிக்கப்பட்டு அதனால் பார்வைச் சிக்கல் நேரலாம். மூக்கினுள் உள்ள 'பாலிப்' என்கிற சதை வளர்ச்சியினால் கண்கள் பக்கவாட்டில் திரும்பி தவளை முகம் உண்டாகும். மூக்கில் சைனஸ் நோயைக் கவனிக்காவிட்டாலும் அது மூளைக்கு அருகிலுள்ள மிகப் பெரிய ரத்தக் குழாய்வரை சென்று பாதிக்கிறது. மேலும் மூளைக்கு மிக பக்கத்திலுள்ள ஃப்ரன்டல் சைனஸ், எத்மாய்டு சைனஸ் போன்ற அறைகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளைவரை பரவி மூளைக்காய்ச்சல் வலிப்பு வரலாம். இதனால் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம் எனவே மூளைக்காய்ச்சலுக்கு முன்னோடியாகிறது சைனஸ்!

சைனஸை சரிப்படுத்துவது எப்படி?

சைனஸ் பிரச்சனையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென்று வந்து போகும் தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இரண்டாவது நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ்.

முதல் வகையைச் சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம். மிகச் சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும். இரண்டாவது வகை சைனஸை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாகச் சரிப்படுத்த முடியாது. வலியை மட்டுமே ஓÊரளவு கட்டுப்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். இப்போது இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் 'எண்டோஸ் கோபிக் சைனஸ் சர்ஜரி' என்ற நவீன அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்துகிறோம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன...

                   முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய முறையாக இருந்தது. மூக்கின் உள்ளே சிரிஞ்ச் மூலமாக நீரைப் பீய்ச்சி அடித்தால், அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். இதற்கு 'சைனஸ் பஞ்சர் சிகிச்சை' என்று பெயர். உள்ளே தேங்கிக் கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்துவிடும். காலப்போக்கில் இந்த ஓட்டை குணமாகி மூடப்பட்டுவிடும். மறுபடி எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். அப்படி வரும்போது மீண்டும் ஓட்டை போட்டுத்தான் அதை வெளியேற்ற வேண்டும்.

                 இப்போது இந்தச் சிக்கலுக்கு தீர்வு கண்டாகிவிட்டது. எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் இருப்பது சளிதானா? அல்லது சீழா என்பதையெல்லாம் மிகத் துல்லியமாகக் கண்டறிய சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற அதிநவீன கருவிகள் வந்துவிட்டன. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது.

எண்டோஸ்கோப்பி ஒரு வரப்பிரசாதம்...

                  மூக்கின் அனைத்து பாகங்களையும் சைனஸ் துவாரங்களில் உள்ள சிறிய பாதிப்புகளையும், கேமரா பொருத்தப்பட்ட எண்டோஸ்கோப்பி கருவி மூலம் வீடியோ திரையின் வழியாக கவனித்து நுண்ணிய கம்பி போன்ற கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதில் காயமோ, தழும்போ ஏற்படாது. உள்ளே இருக்கும் அத்தனை உறுப்புகளும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடுவதால் அருகிலிருக்கும் பார்வை நரம்புகளுக்கோ, மூளைக்கோ துளிகூட பாதிப்பு இல்லாமல் ஆபரேஷனை செய்து முடித்துவிடலாம்.

இந்த சிகிச்சைக்காக நோயாளி மருத்துவமனையில் ஒரு நாள் தங்கினாலே போதும்.

லேசர் சிகிச்சை

லேசர் கருவியின் உதவியினால் எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்வது மேலும் வசதியானது. அதிக அளவு ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. பெரிய காயம் இருக்காது. விரைவில் புண் ஆறிவிடும்.