எந்திரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், சூப்பர் ஸ்டாரின் இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இயக்குநர்களின் பட்டியல் நீண்ட கொண்டே போகிறது. இயக்குநர் மணிரத்னம், ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என அனைத்து இயக்குநர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.
இருந்தாலும் ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு ரஜினி சார் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார். ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர்.
இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார். ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான “ஹரா”வை ( சுல்தான் தி வாரியர்தாங்க ) கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம். அதனால் சத்யா மூவிஸுக்காக ரஜினியை இயக்கப்போவது ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்கின்றனர் கோடம்பாக்கத்தில்.