Welcome PradhiKarthik: சச்சினுக்கு புக்கீகள் வைத்த பட்டப்பெயர்?

Friday, May 31, 2013

சச்சினுக்கு புக்கீகள் வைத்த பட்டப்பெயர்?

சச்சினுக்கு புக்கீகள் வைத்த பட்டப்பெயர்?


மும்பை: கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு தரகர்கள் ஒரு கோட் வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். கிரிக்கெட் இருக்கும் வரை சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இருக்கும் என்று ஊடகங்கள் பெருமை பாடுகின்றன. அத்தகைய சச்சினுக்கு பல பட்டப்பெயர்கள் உள்ளன. கிரிக்கெட்டின் கடவுள், டென்டியா, லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் ஆகியவை சில பெயர்கள் ஆகும். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய தரகர்களின் லேப்டாப்கள், டைரிகள் மற்றும் ஐபேட்களில் சச்சினுக்கு புதிதாக ஒரு பட்டப்பெயர் உள்ளது. 

அந்த பெயர் பட்கு என்பதாகும். இந்தியில் பட்கு என்றால் குள்ளமாக உள்ளவர்களை கேலி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் சொல். நம் ஊரில் கட்டையன் என்று சொல்வது போன்று. கேப்டன் டோணி ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதால் அவருக்கு ஹெலிகாப்டர் என்று பெயர் வைத்துள்ளனர். மலிங்காவுக்கு மக்கி என்று பெயர் வைத்துள்ளனர். தரகர்கள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை பயன்படுத்தாமல் அவர்களுக்கு தாங்கள் வைத்த பட்டப்பெயர்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏனென்றால் வேறு யாராவது கேட்டாலும் அவர்களுக்கு அந்த பெயர் புரியாதல்லவா.