பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்வு: டீசல் விலையும் உயர்ந்தது
புதுடெல்லி, மே 31:
சர்வசேத விலை நிலவரங்களுக்கு ஏற்ப, பெட்ரோலியப் பொருட்களின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டுவதற்கு மாதம் 50 காசுகள் வரை உயர்த்திக் கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு பன்னாட்டு சந்தையில் குறைந்து வருவதால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதில் செலவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.