Welcome PradhiKarthik: டோனி பேட்டி: புதிய விதிமுறைகளால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சவாலாக இருக்கும்

Tuesday, May 28, 2013

டோனி பேட்டி: புதிய விதிமுறைகளால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சவாலாக இருக்கும்

டோனி பேட்டி:
புதிய விதிமுறைகளால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 
சவாலாக இருக்கும்

புதுடெல்லி, மே 28:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. 

இதையொட்டி கேப்டன் டோனி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

சாம்பியன்ஸ் கோப்பையை இதுவரை வென்றதில்லை. கூட்டாக வெற்றி பெற்றுள்ளோம். இத்தொடர் சிறந்த போட்டியாக இருக்கும். இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது. தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்னர். அஜ்மலும் அணியில் இருக்கிறார். 

எனவே, அந்த அணியுடன் மோதுவது நல்ல போட்டியாக இருக்கும். ஆனால், வெற்றி எங்கள் பக்கம் இருக்கும் என நம்புகிறேன். ஒருநாள் போட்டிக்கான விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு முதல் முறையாக வெளிநாட்டில் விளையாட உள்ளோம். 

எனவே, இந்த புதிய விதிமுறைகளால் சில சவால்கள் உள்ளன. இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இப்போட்டி ஒரு நல்ல தளமாகும். அவர்கள் அதிக நேரம் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இது வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஆகும். 

முதல் போட்டிக்கு முன்னதாக நீண்ட இடைவெளி இருக்கிறது. இங்கிலாந்து சென்று தோல்வியடைந்த பிறகு, டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் தொடர்களில் ஒழுங்காக விளையாடியதாகவே நான் உணர்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

சாம்பியன்ஸ் லீக் போட்டி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த டோனி, ஐ.பி.எல். தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.