Welcome PradhiKarthik: மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் மாயம்

Tuesday, May 28, 2013

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் மாயம்

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் மாயம்

கோலாலம்பூர், மே 28:

மலேசியாவின் ராஜாங் ஆற்றில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு இன்று பாறை மீது மோதி கவிழ்ந்தது.

இந்த படகில் பயணித்த 21 பேர் ஆற்றில் மூழ்கி விட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போர்னியோ என்ற இடத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த விரைவுப் படகு சராவக் மாவட்டம் அருகே பாறை மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.


இந்த படகில் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட பலர் பயணித்ததாக கூறப்படுகிறது.

படகின் அனுமதிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை 74 தான் என்ற போதிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால்தான் இந்த விபத்து நேர்ந்தது என மாவட்ட போலீஸ் உயரதிகாரி கூறினார்.

ஆற்றில் விழுந்த பலர் சிரமப்பட்டு நீந்தி கரையேறினர். குழந்தைகளும் முதியோரும் நீந்த முடியாமல் ஆற்றில் மூழ்கி விட்டனர்.

ஆற்றில் மூழ்கிய 21 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அந்த படகில் சென்ற சகபயணி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.