Welcome PradhiKarthik: மடிசார் மாமி பட வழக்கு தணிக்கை துறைக்கு ஐகோர்ட் அறிவுரை

Wednesday, May 29, 2013

மடிசார் மாமி பட வழக்கு தணிக்கை துறைக்கு ஐகோர்ட் அறிவுரை


மடிசார் மாமி பட வழக்கு தணிக்கை துறைக்கு ஐகோர்ட் அறிவுரை


சென்னை: மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர்  கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி  மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். 


  உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தலைப்பே படத்தின் மதிப்பை அறிவிக்கும். நல்ல கதாபாத்திரங்களில் கதாநாயகர்கள் நடித்தனர். இதனால் அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர். தற்போது வர்த்தக நோக்கத்தில் சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. சமுதாயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள்,  வன்முறைகள் செய்வது தவறு இல்லை என்ற கருத்து சினிமா படங்களில் கூறப்படுகிறது. கதாநாயகர்கள் குற்றம் செய்துவிட்டு இறுதியில் தண்டனை பெறாமல் எளிதில் தப்பி விடுவது போல கதைகள் வருகின்றன. இது இளைய சமுதாயத்தின் மனதை கெடுக்கும். 

                    இதற்கு சினிமா தணிக்கைத் துறையினர் (சென்சார் போர்டு) சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.  இதனால் நாட்டில் வன்முறை அதிகமாகிறது. இதை தவிர்க்க வேண்டும்.சினிமா படத்துக்கு தலைப்புகள் சரியாக வைப்பது இல்லை. சில படங்களில் வன்முறையைத் தூண்டும் வார்த்தைகள், கொடூர காட்சிகள் இடம் பெறுகிறது. சில குற்றவாளிகள் சினிமா படத்தை பார்த்து குற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு படத்தில் இருந்து ஆலோசனை கிடைக்கிறது. Ôமடிசார் மாமி மதன மாமாÕ என்ற படத்தின் தலைப்பு சிறிது நாட்களுக்கு பிறகு மடிசார் மாமி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. படத்துக்கு யூ/ஏ சான்றிதழை சென்சார் போர்டு கொடுத்துள்ளது. கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை.  தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது. 

                          இது தொடர்பாக தணிக்கை குழுவினர் ஜூன் 12ந் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவேண்டும். இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். படத்தின் பெயரை மாற்றி தயாரிப்பாளர் படத்தை திரையிடலாம். 

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.