Welcome PradhiKarthik: ஊர்க்காவல் படை சார்பில் ரத்த தான முகாம்: போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

Monday, May 27, 2013

ஊர்க்காவல் படை சார்பில் ரத்த தான முகாம்: போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

ஊர்க்காவல் படை சார்பில் ரத்த தான முகாம்: 
போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


இராமநாதபுரம்:

இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் ரத்த தான முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கினார்.

ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு தண்டீ சுவரன், அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி அலுவலர் டாக்டர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த தான ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார்.

முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

உயிருக்கு ஆபத்தான வேளையில் ஒருவருக்கு ரத்த தானம் செய்வது மிகவும் உயர்ந்த செயலாகும். ரத்த தானம் என்பது பெரும்பாலும் யாருக்கும் அதன் மகத்துவம், முக்கியத்துவம் தெரியாது. ஆனால் தங்கள் குடும்பத் திலோ, உறவினர் வகையிலோ யாருக்காவது பாதிப்பு ஏற்படும் போது தான் ரத்தத்தின் அவசியமும், அதை அளிப்பவரின் உதவும் தன்மையும் தெரியவரும்.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் 5 முதல் 6 லிட்டர் வரை ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது வெறும் 250 மில்லி தான் வழங்குகிறோம். எனவே அனைவரும் தாமாக முன் வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.