Welcome PradhiKarthik: ஸ்ரீசாந்த், சவான் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது

Monday, May 27, 2013

ஸ்ரீசாந்த், சவான் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது

ஸ்ரீசாந்த், சவான் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது


சண்டிகார்:

கடந்த 9-ம் தேதி அன்று மொஹாலியில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றனர். 

பின்னர் இரு அணி வீரர்களும் சண்டிகாரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். அங்கு இரவு முழுவதும் தூங்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்தும், அங்கீட் சவானும் தனது அறைக்கு வெளியே உலாவிக்கொண்டிருந்த காட்சிகள் ரகசியக்கேமிராக்களில் பதிவாகியுள்ளது. 

பின்னர் அவர்கள் கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஜிஜு ஜனார்த்தனை சந்தித்ததாகவும், அப்போது சில பார்சல்களை பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களுடன் இரு அழகிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், மேலும் இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இதுபோன்று சதிவேளைகளில் ஈடுபட்டதற்கான ஆதரங்கள் சிக்குகின்றனவா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.