Welcome PradhiKarthik: ஐ.பி.எல். போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு

Monday, May 27, 2013

ஐ.பி.எல். போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு

ஐ.பி.எல். போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு



கொல்கத்தா:

6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கொல்கத்தாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. 

இந்த வெற்றியை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடிய சச்சின் தெண்டுல்கர் ஐ.பி.எல். விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:- 

உலகக்கோப்பையை பெறுவதற்கு நான் 21 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால், இந்த ஐ.பி.எல். கோப்பையை பெற நான் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 

எனவே இந்த நல்ல தருணத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுகிறேன். இனி அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் விளையாட மாட்டேன். 

இவ்வாறு சச்சின் கூறினார்.