குருப்பெயர்ச்சி பலன்கள் : கும்ப ராசி
கும்பம் :
(அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2,3-1ம் பாதங்கள்) பிறர் உதவியை நாடாமல் முன்னேற விரும்பும் கும்ப ராசி நண்பர்களே! உங்களுக்கு குருபகவான் 4-வது இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். இந்த நிலையில் இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. இந்த இடத்தில் குரு பகவான் இருக்கும்போது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். இதுதவிர குருவின் 5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். 5-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான துலாமில் விழுகிறது. அதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. 7-ம் இடத்துப் பார்வை 11-ம் இடமான தனுசுவில் விழுகிறது. இதன் மூலம் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். கேது 3-ம் இடமான மேஷத்தில் இருப்பது சிறப்பு. அங்கு இறை அருளையும், காரிய அனுகூலத்தையும் கொடுப்பார். நல்ல பொருளாதார வளத்தை அள்ளிக் கொடுப்பார்.
மேறகண்ட நிலையை பார்க்கும்போது குருபகவானும், கேதுவும் நன்மை தருவார்கள். அதோடு குருபகவான், சனிபகவானின் பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. எனவே இது மிகவும் உற்சாகமான காலமாக அமையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் கடந்த ஆண்டு இருந்து வந்த பூசல்கள் மறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேரும். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிறப்பான வரணாகவும் அது அமையும். சிலர் வசதியான வீட்டுக்கு குடி புகுவர். வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு கோவில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோÖசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். சிலர் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள் நல்ல பண புழக்கத்தோடு காணப்படுவர். லாபம் மேலும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த இடையூறுகள் அடியோடு மறையும். மன நிம்மதி ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். சனியால் பளு அதிகரித்தாலும் அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். அது நல்ல வளர்ச்சியை அடையும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெண்களை பங்குதாரர்களாக கொண்டால் வியாபாரம் தழைத்து ஓங்கும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைஞர்கள் நல்ல புகழும், பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க பெறுவர்.
மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். கடந்த ஆண்டில் இருந்த தேக்க நிலை மாறும். மேற்படிப்பு தொடரும். விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிப்பீர்கள். எழுத்தாளர்கள் நல்ல புகழைக் காண வாய்ப்புண்டு. வக்கீல்கள் தொழில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். விவசாயிகள் நல்ல வளத்தோடு மன நிம்மதியும் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை செல்வங்கள் பெருகும். கூவேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
குரு 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த வக்கிர காலத்தில் அவர் சிறப்பான பலனை தரமாட்டார். எனவே இந்த வக்கிர காலத்தில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகம் வேலைப்பளு இருக்கும். எல்லோரடத்திலும் அனுசரணையாக போகவும். திருமணம் போன்ற சுபங்கள் பற்றி பேச வேண்டாம். இந்த காலத்தில் குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆசிரியருக்கு மரியாதை கொடுங்கள்.
பரிகாரம்:- சனிக்கிழமை சனிபகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.