Welcome PradhiKarthik: குருப்பெயர்ச்சி பலன்கள் : மகர ராசி

Wednesday, May 29, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் : மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் :  மகர ராசி 

மகரம் :

(உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதங்கள்) நல்ல உடல் வளத்தையும், கம்பீரத்தையும் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு குரு பகவான் இதுவரை 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் உருவாக்கி இருப்பார். நல்ல பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் இப்போது குரு பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் செய்ய முடியாது. அதே நேரம் மிகவும் பிற்போக்கான பலனையும் அவர் தரமாட்டார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும் கவலை வேண்டாம். குருபகவான் சாதமகற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை கும்பத்தில் விழுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த இடையூறையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். மேலும் தசாபுத்தி சிறப்பாக இருந்தால் நீங்கள் எண்ணற்ற முன்னேற்றங்களையும் காண வாய்ப்பு உண்டு. 

                        ஆனால் குருபகவான் பார்வை உங்களுக்கு மிக சிறப்பாக அமையும்.அவரது 9-ம் இடத்து பார்வை கும்பத்தில் விழுகிறது. அதாவது உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் விழுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.

                               குருபகவான் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். ஆனாலும் இந்த வக்கிர காலத்தில் குருவின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகம் சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும்.

                                  சனிபகவான் 4-3-2014 முதல் 13-7-2014 வரையில் வக்கிரம் அடைகிறார். அந்த காலக்கட்டத்தில் அவரால் கெடுபலன் நடக்காது. மாறாக நன்மையே கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகலாம். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் முயற்சி செய்தால் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரணாக அமையும். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும்.
                             
                                 அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் வேலையில் இருந்த பிரச்சினைகள் இனி இருக்காது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். அதிக முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். ஆரம்ப காலத்தில் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக முன்னேற்றம் தருவதாக அமையும். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதேபோல் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே அந்த வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். பெண்கள் வகையிலும் பிரச்சினை வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.

                                அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண்பர். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனம் தேவை. விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைத்தான் பெற முடியும். அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

 பரிகாரம்:- விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். வசதி படைத்தவர்கள் ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி பகவானும் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அவரின் அருளை பெற சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.