Welcome PradhiKarthik: ராமநாதபுரத்தில் காப்பர் கம்பிகள் திருடிய 4 வாலிபர்கள் கைது

Wednesday, May 29, 2013

ராமநாதபுரத்தில் காப்பர் கம்பிகள் திருடிய 4 வாலிபர்கள் கைது

ராமநாதபுரத்தில் காப்பர் கம்பிகள் திருடிய 4 வாலிபர்கள் கைது


ராமநாதபுரம், மே. 29:

ராமநாதபுரம் பாரதி நகரில் தனியார் பள்ளிக் கூடம் ஒன்று உள்ளது. இதன் அருகில் செல்போன் டவர் உள்ளது. இங்கு தரையில் புதைக்கப்பட்டு இருந்த காப்பர் கம்பியை 4 பேர் கொண்ட கும்பல் தோண்டி எடுக்க முயன்றது. 

இது பற்றிய தகவல் கேணிக்கரை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி பிடித்தனர். 

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது23), அசரப் அலி (19), ரூபன்தாஸ் (19), ஹரிகரசுதன் (17) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இவர்கள் ஏற்கனவே அந்த பகுதியில் 2 செல்போன் டவர்களிலும் ஓம்சக்தி நகரில் ஒரு மாவு மில்லில் இருந்தும் காப்பர் கம்பிகள் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.