Welcome PradhiKarthik: குருப்பெயர்ச்சி பலன்கள் :துலாம் ராசி

Tuesday, May 28, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் :துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் : துலாம் ராசி

துலாம்:

(சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதங்கள்) நீதி நேர்மையுடன் நீங்கள் நடக்க விரும்பும் துலாம் ராசி நண்பர்களே! உங்கள் ராசிக்கு இதுவரை குரு பகவான் 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும்போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம். குரு மட்டுமின்றி சனி பகவான், ராகு, கேது என முக்கிய கிரகங்கள் எதுவுமே உங்களுக்கு சாதகமற்ற இடத்தில்தான் இருந்தனர். இதனால் சிலருக்கு இன்னல்கள் எல்லை மீறியே இருந்திருக்கும். 

                                    இந்த நிலையில் குரு தற்போது 9-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இதனால் இனி முன்னேற்றத்திற்கான அறிகுறியை காணலாம். இது ஏழரை சனிகாலம் என்றாலும் அந்த பாதிப்பு இருக்காத வண்ணம் உங்களுக்கு குருபகவான் நன்மை தர இருக்கிறார். அதோடு அவரது 9-ம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 

                             ஆனாலும் கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் சிற்சில ஊடல்கள் வரத்தான் செய்யும். ஆனால் அது நொடிப்பொழுதில் மறைந்துவிடும். சிறு சிறு பிரச்சினை வந்தாலும் விட்டுக்கொடுத்துபோனால் அது நன்மையில் போய் முடியும். விருந்து,விழா என சென்று வருவீர்கள். நீண்ட காலமாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு கடந்த ஓராண்டாக வேலையில் எண்ணற்ற பிரச்சினை இருந்திருக்கும். அந்த பிரச்சினைக்கு இனி விடிவு ஏற்படும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும். உங்கள் திறமை பளிச்சிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் சிறப்படையும். அதிக வருமானத்தைக் காணலாம். கடந்த கால நஷ்டம் இருக்காது. ஓரளவு சேமிப்பு இருக்கும். இது ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். சற்று கவனம் தேவை. கூடுதல் வருமானத்தை நிரந்தர வைப்பு தொகையில் போட்டு வைக்கவும். கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. 

                          அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றிபெறவும் வாய்ப்பு உண்டு. விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். பெண்கள் குதூகலமான பலனைக் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். மிகவும் உன்னத நிலையை அடைவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.உடல் நலம் சிறப்படையும் . குருவின் வக்கிர காலம் ஒரு கிரகம் வக்கிரம் அடையும் போது அந்த கிரகத்தால் இயல்பாக செயல்பட முடியாது. 

                                      அவர் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். குருபகவான் உங்களுக்கு நன்மை தரும் காலம் என்பதால் இந்த வக்கிர காலத்தில் அவர் சிறப்பான பலனைத் தரமாட்டார். எனவே இந்த வக்கிர காலத்தில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு இருக்கும். எல்லோரிடத்திலும் அனுசரணையாக போகவும். திருமணம் போன்ற சுபங்கள் பற்றி பேச வேண்டாம். இந்த காலத்தில் குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். 


பரிகாரம்:- சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி எள் சோறு படைத்து அதை காக்கைக்கு போடலாம். ஏதாவது பெருமாள் கோவில்களுக்கு சென்று அடிக்கடி தரிசனம் செய்வது நல்லது. யானைக்கு கரும்பு கொடுக்கலாம். ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவிசெய்யலாம். திருநள்ளாறு சென்று வாருங்கள். பத்திகாளியம்மனை வழிபடுவதன் மூலமும், ஞானிகளை சந்தித்து ஆசி பெறுவதன் மூலமும் ராகு-கேதுவால் ஏற்படும் பிரச்சினைகள் மறையும். மனதில் தைரியமும், உற்சாகமும் கிடைக்கும். உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுங்கள்.