இந்தியப்பகுதியில் சீனப்படைகள் மீண்டும் ஊடுருவல்
லடாக் பகுதியில் முகாம் அமைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சை இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் அருகே உள்ள சிரி ஜாப் பகுதியில் தற்போதைய எல்லைக்கோடு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் போது சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனப்பிரதமரின் இந்திய வருகைக்கு இரு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கம்பெனிகள் உத்தேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவைப் பொறுத்தளவில் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்ற கருத்தை தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் அந்தப்பகுதியில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா சாலை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.