ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு? :
ஸ்ரீசாந்துடன் ரூ.4.5 லட்சத்திற்கு நகைகளை வாங்கிய கெய்ல்
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தன்னுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 முக்கிய வீரர்களின் பெயரை அவர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் கெய்ல் பெயர் இடம் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு ஸ்ரீசாந்துடன் சென்ற கெய்ல் கடை உரிமையாளரை சந்தித்து ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நகைக்கான பில்லை ஸ்ரீசாந்தின் நண்பரும் சூதாட்ட தரகராக செயல்பட்ட ஜிஜூ ஜனார்த்தன் செலுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் வெளியான நிலையில் நகைக்கடையின் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.