இராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில்
ஒரு கிலோ அரிசி ரூபாய் 20-க்கு விற்பனை
இராமநாதபுரம், மே. 30:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தமிழக முதல்-அமைச்சர் 17.4.2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யும் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்படி
அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இராமநாதபுரத்தில் அகில் கிடங்கு தெருவில் உள்ள சிறப்பு சிற்றங்காடி,
பரமக்குடியில் மதுரை ராமேசுவரம் சாலையில் உள்ள எமனேஸ்வரம் மக்கள் அங்காடியிலும்,
கமுதி முஸ்லீம் பஜார் சில்லரை விற்பனை கிளையிலும்,
சாயல்குடியில் அருப்புக்கோட்டை மெயின்ரோட்டில் உள்ள சில்லரை விற்பனை கிளையிலும்,
ராமேசுவரம் சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சிறப்பு சிற்றங்காடியிலும்
அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தற்பொழுது புதிய ஏ.டி.டி. 36 என்ற சன்னரக அரிசி வெண்புழுங்கல் கல் குருணை நீக்கப்பட்டது மற்றும் பஞ்சாப் பரிமல் பச்சரிசி ஆகிய தரமான அரிசி அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரம் நிறைந்த அரிசியினை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் கேட்டு கொண்டுள்ளார்.