Welcome PradhiKarthik: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Thursday, May 30, 2013

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


சென்னை: 
                      தமிழகம் மற்றும் புதுவையில் 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.15 மணிக்கு வெளியாகிறது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 12-ந் தேதி வரை நடைபெற்றது. 

                       இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 31-ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

                      பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு 27-ந் தேதி வெளியானது. 

                             இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. 

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.