Welcome PradhiKarthik: மண்டபம் அருகே 40 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 4 பேர் கைது

Tuesday, May 28, 2013

மண்டபம் அருகே 40 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 4 பேர் கைது

மண்டபம் அருகே 40 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 4 பேர் கைது

ராமநாதபுரம், மே. 28:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் போலீசாருக்கு சுந்தரமுடைமாள் பஸ் நிலையத்தில் ரகசியமாக கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 2 பெண்கள் உள்பட 4 பேர் பைகளுடன் நின்று கொண்டு இருந்தனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்து பைகளை சோதனை செய்தனர். அப்போது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த ராக்கம்மாள், கார்த்திகாதேவி, ராமநாதபுரத்தை சேர்ந்த சாரதி, ஜெயசீலன் என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலீசார் பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.