Welcome PradhiKarthik: கிரிக்கெட் வீரர்களுக்கு புக்கிகள் வைத்த ரகசிய பெயர்கள் : கோஹ்லி-ரைசிங், டோனி-ஹெலிகாப்டர்

Thursday, May 30, 2013

கிரிக்கெட் வீரர்களுக்கு புக்கிகள் வைத்த ரகசிய பெயர்கள் : கோஹ்லி-ரைசிங், டோனி-ஹெலிகாப்டர்

கிரிக்கெட் வீரர்களுக்கு புக்கிகள் வைத்த ரகசிய பெயர்கள் : 
கோஹ்லி-ரைசிங், டோனி-ஹெலிகாப்டர்


ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகையே புரட்டிப்போட்டுள்ளது. 3  கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகர் வின்டு தாராசிங், சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் மற்றும் 25க்கும் மேற்பட்ட சூதாட்ட தரகர்கள் கைது செய்யப் பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. லேட்டஸ்டாக  தற்போது  சூதாட்டதரகர்கள்  கிரிக்கெட் வீரர்களுக்கு ‘கோடு வேர்டு' எனப்படும் ரகசிய பெயர்கள் வைத்தது தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் கோஹ்லிக்கு ரைசிங் என புக்கிகள் பெயர் வைத்துள்ளனர். கேப்டன் டோனிக்கு  அவரின்  பேவரைட்  ஷாட்டான  ‘ஹெலிகாப்டர்Õ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹர்பஜனுக்கு  டோபி, மலிங்காவிற்கு மங்கி, கிறிஸ் கெய்லுக்கு ராவன், சேவக்கிற்கு  ஷஸ்மா,  ரெய்னாவிற்கு ஷேர், ஸ்ரீசாந்திற்கு ரோட்டு, யுவராஜ்சிங்கிற்கு மாடல், அஸ்வினுக்கு  பிர்கி எனவும் புக்கிகள் பெயர் வைத்து சூதாட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.