தங்க நகை மீதான வங்கி கடனுக்கு கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை:
தங்கத்தின் தேவையை கட்டுப்படுத்தும் முயற்சியாக வங்கிகளுக்கு, இன்று ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில், வாடிக்கையாளருக்கு தங்க நகைகள், தங்க நாணயங்கள் (50 கிராம் வரை) மீது வங்கிகள் கடன் வழங்கும் போது, அந்த தொகை போர்டு வழங்கிய அனுமதி வரையறைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தங்கம் மாற்று வர்த்தக நிதியம் மீதும், தங்கம் பரஸ்பர நிதியம் அலகுகள் மீதும் கடன் வழங்கக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.